கடந்த 5-ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ளஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.13 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு என்ஐஏ விடம் ஓப்படைக்கப்பட்டுள்ளது.
இதில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரக தூதரத்தின் முன்னாள் ஊழியரான இவர் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிந்தபோதுதான் இந்த குற்றச்சாட்டில் சிக்கினார்.
இந்த விவகாரம் வெளியானதும், கேரள தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராகவும் முதல்வரின் தனிப்பிரிவுச் செயலாளராகவும் இருந்த சிவசங்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அபுபக்கர் மற்றும் அப்துல் ஹமீது ஆகிய 2 சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்படுவர் எனத் தெரிகிறது.
இந்நிலையில், கேரள எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதாலா கூறும்போது, "தங்கக்கடத்தல் வழக்கில் ஏராளமான ரகசியங்கள் புதைந்துள்ளன. இந்தவழக்கில் கேரள அரசின் ஐ.டி.துறை செயலராக இருந்த சிவசங்கர் சம்பந்தப்பட்டுள்ளார் என்றால், அதற்கு முதல்வர் பினராயிவிஜயனும் பொறுப்புதான். எனவேமுதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வரின் கைப்பாவையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாறிவிட்டது. தேசவிரோத சக்திகளை பாதுகாக்கும் கூடாரமாக முதல்வர் அலுவலகம் மாறியுள்ளது. இந்த வழக்கைசிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்" என்றார்.
அதிகாரி தற்கொலை முயற்சி
இதனிடையே திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரி நேற்று தனது கை மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே இவருக்குதங்கக் கடத்தலில் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பாஜக மீது மார்க்சிஸ்ட் புகார்
தங்கக் கடத்தல் சம்பவத்தைப் பயன்படுத்தி இடதுசாரி அரசு மீது களங்கத்தை ஏற்படுத்த பாஜக முயல்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகையான 'பீப்பிள்ஸ் டெமாகிரசி' தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
தங்கக் கடத்தல் வழக்கின் மூலம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் பாஜகவும் இடதுசாரி அரசை நிலைகுலைய வைக்கப் பார்க்கிறது. வழக்கு விசாரணை முடியும் நிலையில் உண்மை தெரியவரும் என்று அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago