கரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் வீதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இதுவரை 6,35,756 பேர் குணமடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கரோனோ பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ஆனால், தற்போது, கரோனாவிலிருந்து குணமடைவோர் வீதம் தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம் மத்தியில் குணமடைந்தோர் வீதம் 52 சதவீதமாக இருந்தது. இது ஜூலை மாத மத்தியில் 63 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதுவரை நாட்டில் 6,35,756 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.
குணமடைவோர் வீதம் அதிகரிப்பது, சிகிச்சை பெறும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைய உதவுகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 10 லட்சத்தைத் தாண்டினாலும், இன்று சிகிச்சை பெறும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை வெறும் 3,31,146 மட்டுமே.
கோவிட்-19 நோயாளிகளின் தினசரி வளர்ச்சி வீதமும் இந்தியாவில் தொடர்ந்து குறைகிறது. கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் 31.28 சதவீதமாக இருந்த வளர்ச்சி வீதம், இந்த மாத மத்தியில் 3.49 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 658 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கைப்படி, பட்டியலில் இந்தியா 106வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் ஒரு மில்லியன் பேருக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால், ஐரோப்பிய நாடுகளை விட 4 முதல் 8 மடங்கு குறைவாக உள்ளது. இந்தியாவைவிட ரஷ்யாவில் பாதிப்பு 8 மடங்கு அதிகம். அமெரிக்காவில் 16 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகவல்கள் அனைத்தையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தனது இணையதளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் புள்ளி விவரங்களுடனும், வரைபடங்களுடனும் விளக்கியுள்ளது.
இந்தியாவில் கரோனா பரவத் தொடங்கியதும், மத்திய அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சுகாதார கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்தியது, கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு நடவடிக்கைகள் போன்றவை, இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் வீதம் அதிகரிப்பதற்கு காரணமாக கருதப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
47 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
14 hours ago