இந்தியாவில் ஒரே நாளில் 35 ஆயிரம் பேர் கரோனாவில் பாதிப்பு; 10 லட்சத்தைக் கடந்தது;3 நாட்களில் ஒரு லட்சம் பேர் பாஸிட்டிவ்

By பிடிஐ

இந்தியாவில் கரோனாவில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணிநேரத்தில் 35 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 10 லட்சத்தைக் கடந்துள்ளது என்றுமத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் 9 லட்சத்தைக் கடந்த நிலையில் இப்போது 10 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 34 ஆயிரத்து 956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 10 லட்சத்து 3 ஆயிரத்து 832 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 6-வது நாளாக 28 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 35 ஆயிரத்து 756 ஆக உயர்ந்துள்ளது, 63.33 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். 3 லட்சத்து 42 ஆயிரத்து 473 பேர் கரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 687 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த உயிரிழப்பு 25 ஆயிரத்தைக்கடந்து 25 ஆயிரத்து 602 ஆக அதிகரித்துள்ளது.

இதில் மகாராஷ்டிராவில்அதிகபட்சமாக நேற்று 266 பேர் உயிரிழந்தனர். அடுத்ததாக கர்நாடகாவில் 104 பேர், தமிழகத்தில் 69, டெல்லியில் 58 பேர், ஆந்திராவில் 40, உத்தரப்பிரதேசத்தில் 34 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு வங்கத்தில் 23பேர், பிஹாரில் 17 பேர், ஜம்மு காஷ்மிரில் 16 பேர், தெலங்கானா, குஜராத்தில் தலா 10 பேர், பஞ்சாபில் 9 பேர் பலியாகியுள்ளனர். ராஜஸ்ஸதானில் 8 பேர், மத்தியப்பிரதேசத்தில் 7 பேர், ஜார்கண்டில் 4 பேர், ஹரியாணாவில் 3 பேர், அசாம், கேரளா, ஒடிசாவில் தலா 2 பேர், சத்தீஸ்கர், கோவா, புதுச்சேரியில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 11,194 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 3,545 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 2,236 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 2,089 ஆகவும், அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 1,023 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 689 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 1,046 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 538 ஆகவும் அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 396 ஆகவும், ஹரியாணாவில் 322 ஆகவும், ஆந்திராவில் 492 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 1,032 பேரும், பஞ்சாப்பில் 230 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 222 பேரும், பிஹாரில் 197 பேரும், ஒடிசாவில் 79 பேரும், கேரளாவில் 37 பேரும், உத்தரகாண்டில் 50 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 11 பேரும், ஜார்க்கண்டில் 42 பேரும், அசாமில் 48 பேரும், திரிபுராவில் 3 பேரும், அருணாச்சலப் பிரதேசத்தில் 3 பேரும், மேகாலயா, தாத்ராநகர் ஹாவேலி, டையூ டாமனில் தலா இருவரும் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 22 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 82 ஆயிரத்து 281 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,58,140 ஆக உயர்ந்துள்ளது.

2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 369ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 10,7,416 ஆகவும் அதிகரித்துள்ளது.

டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,645 பேராக அதிகரித்துள்ளது. 97,693 பேர் குணமடைந்துள்ளனர்.

4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 45,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 32,103 பேர் குணமடைந்தனர்.

ராஜஸ்தானில் 27,174 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 20,378 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 43,441 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 36,117 பேரும், ஆந்திராவில் 38,044 பேரும், பஞ்சாப்பில் 9.094 பேரும், தெலங்கானாவில் 41,018 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 12,156 பேர், கர்நாடகாவில் 51,422 பேர், ஹரியாணாவில் 24,002 பேர், பிஹாரில் 21,764 பேர், கேரளாவில் 10,275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,872 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 15,392 பேர், சண்டிகரில் 651 பேர், ஜார்க்கண்டில் 4,624 பேர், திரிபுராவில் 2,283 பேர், அசாமில் 19,754 பேர், உத்தரகாண்டில் 3,982 பேர், சத்தீஸ்கரில் 4,732 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 1,377 பேர், லடாக்கில் 1,147 பேர், நாகாலாந்தில் 916பேர், மேகாலயாவில் 377 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாதர் நகர் ஹாவேலியில் 552 பேர், புதுச்சேரியில் 1,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 947 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 272 பேர், சிக்கிமில் 243 பேர், மணிப்பூரில் 1,764 பேர், கோவாவில் 3,108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

47 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்