65 வயதுக்கு மேற்பட்டோர் தபால் வாக்கு அளிக்க அனுமதி இல்லை

By செய்திப்பிரிவு

பிஹார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிஹாரில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிலிருந்தே வாக்களித்தல் அல்லதுதபால் வாக்குகளை செலுத்தலாம் என்று பிஹார் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில் பிஹார் தேர்தல், இதர தேர்தல்களில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது என தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருவதால் தற்போதுள்ள மனித சக்தி, அடிப்படை கட்டமைப்பு வசதிகளைக் கொண்டு பாதுகாப்பு வசதிகளை அளிக்க இயலாது. எனவே தற்போதைய நிலவரப்படி பிஹார் பேரவை தேர்தல், இதரதேர்தல்களில் 65 வயதுக்கு மேற்பட்டோர் தபால் வாக்களிக்க அனுமதிக்க முடியாது என்றுதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்