மும்பையின் நிழல் உலக தாதாக்களில் ஒருவர் அபு சலீம், இவர் 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டவர். வெளிநாடுகளுக்கு தப்பிய இவர் கடந்த 2005-ல் இந்தியா அழைத்து வரப்பட்டார். கொலை மற்றும் ஆள்கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய அபு சலீம் மீது பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணை நடைபெறுகிறது.
இந்நிலையில், அபு சலீம் மற்றும்மற்றொரு தாதாவான கான் முபாரக் ஆகியோரின் பணத்தை டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அவர்களது கூட்டாளியான கஜேந்திரா சிங் முதலீடு செய்து நிர்வகித்து வந்தார். அதேசமயம் இருவரது பெயரால் பல்வேறு தொழிலதிபர்களை மிரட்டி பணமும், ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் நிலங்களையும் கஜேந்திரா பறித்து வந்துள்ளார்.
டெல்லி தொழிலதிபர் ஒருவரிடம்நில அபகரிப்பு செய்தது தொடர்பான வழக்கு நொய்டாவின் செக்டார் 20 காவல் நிலையத்தில் பதிவாகி உள்ளது. இதே காவல் நிலையத்தில் கஜேந்திரா மீது ஏற்கெனவே பணம் கேட்டு மிரட்டியதாக 2 வழக்குகள் உள்ளன. இதனால் உத்தரபிரதேச அதிரடிப்படையினரால் தேடப்பட்டு வந்த கஜேந்திரா நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.
பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த கான் முபாரக், கடந்த 2017-ல் உ.பி. அதிரடிப்படையினரால் கைதாகி சிறையில் உள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
14 mins ago
இந்தியா
47 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago