இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரையில்லாத வகையில் 29 ஆயிரத்து 429 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 582 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்து 36 ஆயிரத்து 181 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்குகிறது, 5 லட்சத்து 92 ஆயிரத்து 31 பேர் குணமடைந்துள்ளனர். 3 லட்சத்து 19 ஆயிரத்து 840 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கரோனாவிலிருந்து மீண்டோர் சதவீதம் 63.24 ஆக இருக்கிறது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 582 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்தமாகப் பலியானோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 309 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 213 பேர் நேற்று உயிரிழந்தனர்.
» பாஜக-வை வீழ்த்தவே பாடுபட்டேன், அந்தக் கட்சியுடன் இணைய மாட்டேன்: சச்சின் பைலட் பேட்டி
» சாபஹார் ரயில் திட்டத்திலிருந்து இந்தியாவை நீக்கியது ஏன்?- ஈரான் விளக்கம்
கர்நாடகாவில் 85 பேர், தமிழகத்தில் 67 பேர், ஆந்திராவில் 43 பேர், டெல்லியில் 35 பேர், உத்தரப் பிரதேசத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்கத்தி்ல 24 பேர், பிஹார், குஜராத்தில் தலா 14 பேர் மத்தியப் பிரதேசம், தெலங்கானாவில் தலா 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
பஞ்சாப்பில் 9 பேர், ஜம்மு காஷ்மீரில் 8 பேர், அசாம், ஹரியாணா, ஒடிசாவில் தலா 4 பேர், ஜார்க்கண்டில் 3 பேர், சண்டிகரில் 2 பேர், அருணாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், கோவா, கேரளா, உத்தரகாண்டில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 10,695 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 3,446 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 2,069 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 2,099 ஆகவும் அதிகரித்துள்ளது.
உயிரிழப்பில் மூன்றாவது இடத்தில் குஜராத் இருந்த நிலையில் அந்த மாநிலத்தைப் பின்னுக்குத் தள்ளி தமிழகம் மூன்றாவது இடத்துக்கு நகர்ந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 980 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 673 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 983 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 525 ஆகவும் அதிகரித்துள்ளது.
தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 375 ஆகவும், ஹரியாணாவில் 312 ஆகவும், ஆந்திராவில் 408 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 842 பேரும், பஞ்சாப்பில் 213 பேரும் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 195 பேரும், பிஹாரில் 174 பேரும், ஒடிசாவில் 74 பேரும், கேரளாவில் 34 பேரும், உத்தரகாண்டில் 50 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 11 பேரும், ஜார்க்கண்டில் 36 பேரும், அசாமில் 40 பேரும், திரிபுராவில் 2 பேரும், அருணாச்சலப் பிரதேசத்தில் 3 பேரும், மேகாலயாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 18 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்து 665 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,49,007 ஆக உயர்ந்துள்ளது.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 324 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 97,310 ஆகவும் அதிகரித்துள்ளது.
டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,15,346 பேராக அதிகரித்துள்ளது. 93,236 பேர் குணமடைந்துள்ளனர்.
4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 43,237 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,533 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 25,571 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 19,005 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 39,724 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 32,838 பேரும், ஆந்திராவில் 33,019 பேரும், பஞ்சாப்பில் 8,511 பேரும், தெலங்கானாவில் 37,745 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 11,173 பேர், கர்நாடகாவில் 44,077 பேர், ஹரியாணாவில் 22,628 பேர், பிஹாரில் 19,228 பேர், கேரளாவில் 8,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,438 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒடிசாவில் 14,280 பேர், சண்டிகரில் 600 பேர், ஜார்க்கண்டில் 4,091 பேர், திரிபுராவில் 2,170 பேர், அசாமில் 17,807 பேர், உத்தரகாண்டில் 3,686 பேர், சத்தீஸ்கரில் 4,379 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 1,309 பேர், லடாக்கில் 1,093 பேர், நாகாலாந்தில் 896 பேர், மேகாலயாவில் 318 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாதர் நகர் ஹாவேலியில் 520 பேர், புதுச்சேரியில் 1,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 829 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 238 பேர், சிக்கிமில் 209 பேர், மணிப்பூரில் 1,672 பேர், கோவாவில் 2,753 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் 462 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago