கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெயரைப் பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கட்டத்தப்பட்ட வழக்கில் கைதான பெண் ஸ்வப்னா சுரேஷுடன் தொடர்பு வைத்துள்ளதாகக் கூறப்படும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், முதல்வரின் முதன்மைச் செயலாளர் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவருமான சிவசங்கரிடம் 9 மணிநேரம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
சுங்கத்துறை அதிகாரிகள் அனுப்பிய சம்மனைத் தொடர்ந்து, நேரில் ஆஜராக திருவனந்தபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்துக்கு நேற்று மாலை 5 மணிக்கு சிவசங்கரன் சென்றார். அவரிடம் விடிய, விடிய 9 மணிநேரம் விசாரித்து இன்று அதிகாலை 2.15 மணிக்கு அவரை விசாரணை முடிந்து அதிகாரிகள்அனுப்பி வைத்தனர்.
கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் குமார் என்பவரைக் கைது செய்தனர். பின்னர் அந்த வழக்கு என்ஐஏவிசாரணைக்கு மாற்றப்பட்டது. சரித் குமார் அளித்த தகவலின்படி, முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸவப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை என்ஐஏ அமைப்பினர் கைது ெசய்தனர்.
இதில் முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸ்வப்னா சுரேஷ் ஐக்கிய அரபு அமீரக தூதரத்தின் முன்னாாள் ஊழியர், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் விற்பனை மேலாளராகாகவும் இருந்தபோதுதான் இந்த குற்றச்சாட்டில் சிக்கினார்.
இந்த விவகாரம் வெளியானது தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராகவும், முதல்வரின் தனிப்பரிவுச் செயலாளராகவும் இருந்த சிவசங்கரன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஒரு ஆண்டு விடுப்பில் சென்றுள்ளார்.
இந்நிலையில் தங்கக் கடத்தில் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனுக்கு சுங்கத்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இந்த சம்மனை ஏற்று நேற்று சுங்கத்துறை அலுவலகத்துக்கு மாலை 5.15 மணிக்கு சிவசங்கரன் சென்றார். அவரிடம் சுங்கத்துறையினர் 9 மணிநேரம் விடிய விடிய விசாரணை நடத்தி முடித்து இன்று அதிகாலை 2.15 மணிக்கு அனுப்பினர் என்று சங்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடைய தங்கம் கடத்தலில் கைதாகியுள்ள ஸ்வப்னா சுரேஷுடன் தொடரில் சிவசங்கரன் இருந்ததாக கூறப்படும் புகார் தொடர்பாக விசாரணை நடத்த கேரள தலைமைச் செயலாளர் டாக்டர் விஸ்வாஸ் மேத்தா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் முடிவில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago