கர்நாடகாவில், குறிப்பாக பெங்களூருவில் கரோனா வைரஸ் மிகவேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை நேற்று 41 ஆயிரத்தை கடந்தது.
இந்நிலையில் கர்நாடக தலைமை செயலர் விஜய் பாஸ்கர் விடுத்த அறிக்கையில், “பெங்களூரு நகர மற்றும் புறநகர் மாவட்டங்களில் 14-ம் தேதி இரவு 8 மணி முதல் 22-ம் தேதி காலை 5 மணி வரை 7 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுகிறது.
ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் செயல்படும். மளிகை, காய்கறி, பழம் மற்றும் இறைச்சி கடைகள் காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே திறக்கப்படும்.
அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோ, வாடகை கார்கள் இயங்காது. அத்தியாவசிய சேவைக்கான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
38 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago