தெலங்கானாவின் பெத்தபள்ளி மாவட்ட தலைநகர் பெத்தபள்ளியில் அரசு மருத்துவமனை செயல்படுகிறது. தெனுகுவாடா கிராமத்தை சேர்ந்த 43 வயது நபர், காய்ச்சல் அறிகுறிகளுடன் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் கடந்த 12-ம் தேதி அவர் உயிரிழந்தார்.
ஆம்புலன்ஸ் இல்லாத நிலையில் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நகராட்சி நிர்வாகத்திடம் உதவி கோரப்பட்டது. நகராட்சி சார்பில் ஒரு டிராக்டர் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த டிராக்டர் ஓட்டுநர், உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்ல மறுத்து விட்டார். வைரஸ் அச்சுறுத்தலால் வேறு எந்த ஓட்டுநரும் டிராக்டரை ஓட்ட முன்வரவில்லை.
இதைத் தொடர்ந்து மாவட்ட கரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரியும் மருத்துவருமான ஸ்ரீராம் (45), டிராக்டரை ஓட்ட முன்வந்தார். கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவரின் உடலை டிராக்டரில் ஏற்றி அவரே மயானத்துக்கு ஓட்டிச் சென்றார். இறுதிச் சடங்குகள் முடியும் வரை மயானத்தில் காத்திருந்தார். மருத்துவர் ராம் டிராக்டர் ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago