இந்தியா டிஜிட்டல்மயமாக்க நிதியத்தை அறிவித்த கூகுள் நிறுவனம் இதன் மூலம் இந்தியாவில் அடுத்த 5-7 ஆண்டுகளில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது தோராயமாக ரூ.75,000 கோடி முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது.
கூகுள் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே நடைபெற்ற பேச்சுகளுக்குப் பிறகு இந்த முடிவை கூகுள் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கூகுள் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை கூறியதாவது, “இந்த முதலீட்டை ஈக்விட்டி முதலீடுகள், கூட்டுறவுகள், உள்கட்டமைப்பு, சூழலிய அமைப்பு முதலீடுகள் என்ற வழியில் கூகுள் செய்யவுள்ளது. இந்தியாவின் எதிர்காலம் மற்றும் அதன் டிஜிட்டல் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையின் பிரதிபலிப்பே இந்த முதலீட்டு முடிவு.
இந்தியாவின் டிஜிட்டல்மயமாக்கத்தின் 4 முக்கியப் பகுதிகளில் இந்த முதலீடு கவனம் செலுத்தும். ஒவ்வொரு இந்தியருக்கும் அவரவர் மொழியிலேயே தகவலை எளிதில் அணுக இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்படும். இந்தியாவின் தனித்துவ தேவைகளுக்கு தகுந்தவாறு புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் கட்டமைத்தல், வர்த்தகங்கள் டிஜிட்டல்மயமாக உருமாற அதிகாரம் வழங்கும் முதலீடுகளாக இது அமையும். சுகாதாரம், கல்வி, வேளாண்மை ஆகிய சமூக நன்மைகளுக்கான செயற்கை அறிவு மற்றும் தொழில்நுட்பங்களை வழங்குதல்.
தொழில்நுட்பம் நம் தனிப்பட்ட உலகத்துக்கும் வெளியே சாளரங்களை திறந்து விடுவதாகும். நான் இளம் பருவத்தில் இருக்கும் போது கற்றுக்கொள்ளவும் வளர்ச்சியடையவும் ஒவ்வொரு புதிய தொழில்நுட்பமும் புதிய வாய்ப்புகளைத் தருவித்தது. ஆனால் இது வேறு ஒரு இடத்திலிருந்து என்னை வந்தடைவதற்காக நான் காத்திருக்க நேரிட்டது. இன்றைய இந்தியாவில் தொழில்நுட்பம் வேறு இடத்திலிருந்து வரவழைக்கப்பட வேண்டிய நிலையில் இல்லை. ஒட்டுமொத்த புதிய தலைமுறை தொழில்நுட்பமும் இந்தியாவில்தான் முதலில் நிகழ்கிறது.
4 ஆண்டுகளுக்கு முன்பாக மூன்றில் ஒரு பங்கு வர்த்தகம் தான் ஆன்லைன் இருப்பைக் கொண்டிருந்தது. ஆனால் இன்றோ 26 மில்லியன் சிறு மற்றும் நடுத்தர தொழில்களை தேடல் எந்திரத்திலும் வரைபடத்திலும் காணக்கிடைக்கிறது. ஒவ்வொரு மாதமும் 150 மில்லியன் பயனாளர்கள் சேர்ந்து வருகின்றனர்.
கரோனா பெருந்தொற்றினால் டிஜிட்டல் சாதனங்களுக்கு பெரிய தேவை ஏற்பட்டு வருகிறது. டிஜிட்டல்மயமாக்கம் மூலம் லாக்டவுன் காலக்கட்டங்களில் பலருக்கும் பொருட்களையும் சேவைகளையும் பெற பெரிய உதவி புரிந்து வருகிறது.” என்றார் சுந்தர் பிச்சை.
முன்னதாக இன்று காலை சுந்தர் பிச்சையுடன் மேற்கொண்ட உரையாடல் பற்றி பிரதமர் மோடி தன் ட்விட்டரில் குறிப்பிட்ட போது, “இன்று காலை சுந்தர்பிச்சையுடன் பயனுள்ள உரையாடல் மேற்கொண்டேன். பரந்துபட்ட பல விஷயங்களைப் பற்றியும் பேசினோம். குறிப்பாக இந்திய விவசாயிகளின், இளைஞர்களின், தொழில்முனைவோர்களின் வாழ்க்கையை மாற்றும் தொழில்நுட்ப ஆற்றல் குறித்து அதிகம் பேசினோம்” என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago