‘‘ஒரே குடும்பம்; சச்சின் பைலட்டுக்கு காங்கிரஸ் கதவு திறந்தே உள்ளது’’ - சுர்ஜேவாலா வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

நாம் அனைவரும் காங்கிரஸ் என்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சச்சின் பைலட்டுக்கு காங்கிரஸ் கதவு திறந்தே உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா வலியுறுத்தியுள்ளார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக அசோக் கெலாட் இருந்து வருகிறார்.
அங்கு துணை முதல்வராக உள்ள சச்சின் பைலட்டுக்கும், முதல்வர் கெலோட்டுக்கும் இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது.

அசோக் கெலோட்டின் நடவடிக்கையால் சச்சின் பைலட் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜகவினர் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

ராஜஸ்தானிலும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயல்வதாகக் குற்றம்சாட்டி முதல்வர் அசோக்கெலாட் 90-க்கும் மேற்ட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களை தனியார் தங்கும்விடுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார்.

எனினும் மாநிலங்களவைத் தேர்தல் பிரச்சினை இன்றி நடந்து முடிந்தது. இந்தநிலையில் ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயலுவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். இந்நிலையில் துணை முதல்வர் சச்சின் பைலட் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

அவருக்கு குறிப்பிட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும் தெரிகிறது. சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லி அருகே குருகிராமில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்தநிலையில் ராஜஸ்தானில் காங்கிரஸ் உட்கட்சி பூசலை தீர்ப்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா அனுப்பப்பட்டுள்ளார். ஜெய்ப்பூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘நாம் ஒரே குடும்பம். குடும்பத்திற்குள் யாருக்காவது மன வருத்தம் ஏற்பட்டு இருந்தால் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து பேசி தீர்வு காணலாம். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் தலைமை சார்பில் அழைப்பு விடுக்கிறேன். சச்சின் பைலட்டுக்கு காங்கிரஸின் கதவுகள் திறந்தே இருக்கிறது. எனவே மன வருத்தத்தில்உள்ளவர்கள் திரும்பி வர வேண்டும்’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்