கரோனா பாதிப்பு குறைகிறது: விமானப் பயணத்துக்கான விதிகளைத் தளர்த்தியது மத்திய அரசு

By பிடிஐ

நாடு முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கான விதிமுறைகளைத் தளர்த்தி மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, விமானப் பயணத்துக்கு வரும் பயணிகள் தங்கள் சுயவிவரப் படிவத்தில் 3 வாரங்களாக கரோனாவில் பாதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களைப் பயணிக்க அனுமதிக்கலாம் என்று தளர்த்தியுள்ளது.

இதற்கு முன் கடந்த மே 21-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் விமானத்தில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் கண்டிப்பாக சுயவிவரப் படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும், அதில் கடந்த 2 மாதங்களாக கரோனாவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கும் பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்திருந்தது. தற்போது அதை 3 வாரங்களாகக் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் கரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8.50 லட்சத்தைக் கடந்துள்ளது. ஏறக்குறைய குணமடைவோர் சதவீதம் 63 ஆக அதிகரித்துள்ளதையடுத்து, விதிகளைத் தளர்த்தியுள்ளது.

இதுகுறித்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சக அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “இந்தியாவில் ஏராளமான மக்கள் கரோனாவிலிருந்து நாள்தோறும் குணமடைந்து வருகின்றனர். அவர்கள் விமானத்தில் பயணிக்க வரும்போது சிரமங்களைக் குறைக்கும் வகையில் சுயவிவரப் படிவத்தின் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன் அரசு விமான நிறுவனங்களுக்கு அளித்த வழிகாட்டலில், பயணிகள் விமானத்தில் பயணிக்க வரும்போது, கரோனாவில் தாங்கள் 3 வாரங்களாகப் பாதிக்கப்படவி்ல்லை என்று சுயவிவரப் படிவத்தில் குறிப்பிடுவது அவசியம் என்று தெரிவித்தது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களும் 3 வாரங்கள் நிறைவடைந்தபின் அவர்கள் விமானத்தில் பயணிக்கலாம். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சான்று, குணமடைந்த சான்று ஆகியவற்றை மருத்துவமனையிலிருந்து பெற்று அதை விமான நிறுவனத்திடம் காண்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

59 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்