இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரையில்லாத அளவாக கரோனாவால் புதிதாக 28 ஆயிரத்து 701 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 500 பேர் உயிரிழந்தனர் என்று மத்திய சுகாதாரத்துறையின் புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 28 ஆயிரத்து 701 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒட்டுமொத்த பாதிப்பு 8 லட்சத்து 78 ஆயிரத்து254 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 53 ஆயிரத்து 470 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து மீண்டோர் சதவீதம் 63.01 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து ஆயிரத்து 609 ஆக அதிகரித்துள்ளது
தொடர்ந்து 4-வது நாளாக நாள்தோறும் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 26 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 10,289 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 3,371 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 2,045 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 1,966 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 932 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 653 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 934 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 510 ஆகவும் அதிகரித்துள்ளது.
தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 356 ஆகவும், ஹரியாணாவில் 301 ஆகவும், ஆந்திராவில் 328 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 684 பேரும், பஞ்சாப்பில் 199 பேரும் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 179 பேரும், பிஹாரில் 143 பேரும், ஒடிசாவில் 64 பேரும், கேரளாவில் 31 பேரும், உத்தரகாண்டில் 47 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 11 பேரும், ஜார்க்கண்டில் 30 பேரும், அசாமில் 35 பேரும், திரிபுரா, அருணாச்சலப் பிரதேசத்தில் தலா 2 பேரும், மேகாலயாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 18 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 54ஆயிரத்து 427 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,40,325 ஆக உயர்ந்துள்ளது.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 470 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 89,532 ஆகவும் அதிகரித்துள்ளது.
டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,12,494 பேராக அதிகரித்துள்ளது. 89,968 பேர் குணமடைந்துள்ளனர்.
4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 41,820 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29,162 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 24,392 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 17,632 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 36,476 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 30,013 பேரும், ஆந்திராவில் 27,235 பேரும், பஞ்சாப்பில் 7,821 பேரும், தெலங்கானாவில் 29,168 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 10,513 பேர், கர்நாடகாவில் 38,843 பேர், ஹரியாணாவில் 21,240 பேர், பிஹாரில் 16,642 பேர், கேரளாவில் 7,873 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,095 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒடிசாவில் 13,121 பேர், சண்டிகரில் 559 பேர், ஜார்க்கண்டில் 3,613 பேர், திரிபுராவில் 2,054 பேர், அசாமில் 16,071 பேர், உத்தரகாண்டில் 3,537 பேர், சத்தீஸ்கரில் 4,059 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 1,213 பேர், லடாக்கில் 1,086 பேர், நாகாலாந்தில் 774 பேர், மேகாலயாவில் 306 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாதர் நகர் ஹாவேலியில் 479 பேர், புதுச்சேரியில் 1,418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 739 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 231 பேர், சிக்கிமில் 153 பேர், மணிப்பூரில் 1,609 பேர், கோவாவில் 2,453 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் 359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago