சத்தார்பூரில் உள்ள சர்தார் படேல் கோவிட் பராமரிப்பு மையம், மருத்துவமனையை ஹர்ஷ வர்தன் பார்வையிட்டார்.
புதுடெல்லி சத்தார்பூரில் உள்ள சர்தார் படேல் கோவிட் பராமரிப்பு மையத்தை இன்று பார்வையிட்ட மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ் வர்தன், அந்த மையத்தின் கோவிட்-19 மேலாண்மை நிலையை ஆய்வு செய்தார். மத்திய மற்றும் டெல்லி அரசுகளின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு வலுவூட்டுவதற்காக சத்தார்பூர், டெல்லியில் உள்ள ராதா சோனி சத்சங்க் பியாஸில் சர்தார் படேல் கோவிட் பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்த ஹர்ஷ வர்தன், ராதா சோனி சத்சங்க் பியாஸின் சமையலறையையும், அதைத் தொடர்ந்து சேமிப்பு அறையையும் பார்வையிட்டார்.
மையத்தில் உள்ள உள்-நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்த்தியை அதிகரிப்பதற்காக இயற்கை மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை முறைகளை இந்த சுகாதார மையம் பின்பற்றுகிறது.
நோய்த் தொற்றில் இருந்து விடுபட்டு தங்கள் சேவைகளைத் தற்போது மையத்துக்கு அளித்து வரும் 30 கோவிட் தன்னார்வலர்களுடன் ஹர்ஷ் வர்தன் உரையாடினார். அவர்களை "கோவிட் வீரர்கள்" என்று வர்ணித்த அவர், அவர்களது பங்களிப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்த மையத்தைப் பற்றி மத்திய சுகாதார அமைச்சருக்கு எடுத்துரைக்கப்பட்ட போது, சர்தார் படேல் கோவிட் பராமரிப்பு மையத்தில் தயாராக உள்ள 10200 படுக்கைகளில் 2000 பயன்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தலா 100-116 படுக்கைகளுடன் 88 பகுதிகள் இருக்கும் நிலையில், இரண்டு பிரிவுகளை மேற்பார்வையிட ஒரு செவிலியர்
நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி, 20 பிரிவுகள் மற்றும் 10 செவிலியர் நிலையங்களுடன் சர்தார் படேல் கோவிட் பராமரிப்பு மையம் தயராக உள்ளது. பிரத்யேக கோவிட் சுகாதார மையத்துக்கு பிராண வாயு ஆதரவுடன் 10 சதவீதப் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி, 123 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, அதில் இணை நோயுற்ற தன்மையுள்ள 5 நோயாளிகள் உயர் சிகிச்சைகாக மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த மையத்தில், தேசிய மனநல மற்றும் நரம்பு அறிவியல் நிறுவனத்தை (NIMHANS) சேர்ந்த பயிற்சி பெற்ற ஆலோசகர்களால் உளவியல் ஆலோசனையும், மனநலச் சேவைகளும் அளிக்கப்படுகின்றன. ITBP-ஐ சார்ந்த மருத்துவமனையால் தியானம் மற்றும் யோகா பயிற்சிகளும், தொலை மருத்துவ ஆதரவும் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.
பிரத்யேக கோவிட் சுகாதார மையத்துக்கு ITBP-இல் இருந்து உட்புற மருத்துவ நிபுணர்கள் கிடைக்கப்பெறுகிறார்கள்: 1 மருத்துவர், 2 செவிலிப் பணியாளர்கள் மற்றும் 3 துணை மருத்துவப் பணியாளர்கள் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு அமர்வில் பணியில் இருக்கிறார்கள். எட்டு நாட்களுக்குப் பின் தனிமைப்படுததுதலுக்கு இந்த மருத்துவக் குழு அனுப்பப்பட்டு, புதிய பணியாளர்கள் அவர்களுக்கு பதில் அமர்த்தப்படுகின்றனர். மேலும், மருத்துவப் பணியாளர்களில் 10 சதவீதம் அவசரத் தேவைக்காக தயார் நிலையில் வைக்கப்ப்பட்டுள்ளனர்.
கோவிட் மையத்தின் தயார் நிலை குறித்து திருப்தி தெரிவித்த ஹர்ஷ் வர்தன், "பிரதமரின் தொடர் வழிகாட்டுதலின் கீழ், கோவிட்-19-ஐக் கட்டுப்படுத்த சுகாதார உள்கட்டமைப்பை நாடு முழுவதும் நாம் மேம்படுத்தியுள்ளோம்," என்றார்.
"பத்து பிரத்யேக அடிப்படை பராமரிப்பு உயிர் காக்கும் அவசர ஊர்திகள், எக்ஸ்-கதிர், பிராண வாயு உருளைகள், பை பாசிக் (Bi PHASIC) அதிர்வுக் கருவி, நாடி ஆக்சிமீட்டர்கள், உறிஞ்சும் இயந்திரங்கள், BI PAP இயந்திரம் மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவ வசதிகளுடன் இந்த மையம் கோவிட்-19 நோயாளிகளைக் கையாளத் தயாராக உள்ளதைப் பார்க்கும் போது திருப்திகரமாக உள்ளது."
மையத்தைப் பார்வையிட்டப் பிறகு ஊடகங்களிடம் பேசிய டாக்டர், ஹர்ஷ் வர்தன், "பரந்து விரிந்த பரிசோதனை, கண்காணிப்பு, துல்லியமான சோதனை மற்றும் பாதிப்புள்ளவர்களின் மருத்துவ மேலாண்மை மூலம் இந்தியாவின் மருத்துவ செயல்முறை முன்கூட்டியே கண்டறிதல் மீது
கவனம் செலுத்துகிறது. மிகவும் குறைவான இறப்பு விகிதமான 2.66 சதவீதத்தை இதனால் அடைய முடிந்திருக்கிறது. 5.3 லட்சம் நோயாளிகள் குணமடைந்ததன் மூலம் 63 சதவீதமாக இருக்கும் குணமடையும் விகிதத்தை வைத்து நமது வெற்றியைக் கணக்கிடலாம்," என்றார். பொதுமுடக்க விதிகள் தளர்வு 2.0-இல் நாம் மேலும் முன்னேறும் போது, நாம் அனைவரும் "சமூகத் தடுப்பு மருந்தான இரண்டு கெஜம் தூரத்தை" உறுதி செய்வது முக்கியமாகும் மற்றும் நாம் ஒவ்வொருவரும் சரியான கோவிட் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago