ம.பி.யில் காங்கிரஸுக்கு பின்னடைவு; மேலும் ஒரு எம்எல்ஏ முதல்வருடன் திடீர் சந்திப்பு; பாஜகவில் இணைகிறார்

By செய்திப்பிரிவு


மத்திய பிரதேசத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ இன்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை சந்தித்து பேசினார்.

கடந்த 2018 நவம்பரில் மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் அதிக இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் முதல்வராக பதவியேற்று 15 மாதங்கள் ஆட்சி நடத்தினார்.

அவருக்கு எதிராக காங்கிரஸின் மற்றொரு மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா போர்க்கொடி உயர்த்தினார். அவரதுஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதன்பின் ஜோதிர் ஆதித்யசிந்தியாவும் அவரது ஆதரவாளர்களும் பாஜகவில் இணைந்தனர்.

இதனால் கடந்த மார்ச் 20-ம் தேதி காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. கடந்த மார்ச் 23-ம் தேதி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக அரசு பதவியேற்றது. அதன் பின்னர் ஜோதிராதித்ய சிந்தியா மாநிலங்களவை எம்.பி.யானார். அவரது ஆதரவாளர்கள் ம.பி.யில் அமைச்சர்களாகினர்.

இந்தநிலையில் மத்திய பிரதேசத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ இன்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை சந்தித்து பேசினார். காங்கிரஸ் எம்எல்ஏவான பிரத்யூமன் சிங் லோதி இன்று போபாலில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை சந்தித்து பேசினார். அவர் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்