கல்லூரி தேர்வுகள் ரத்து: கர்நாடக துணை முதல்வர் அறிவிப்பு

By இரா.வினோத்

கர்நாடக உயர்கல்வித் துறையைநிர்வகிக்கும் துணை முதல்வர் அஷ்வத் நாராயணா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் கடந்த 3 மாதங்களாக கல்லூரித் தேர்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இளங்கலை, முதுகலை, பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்களின் 2019-20-ம் கல்வி ஆண்டுக்கான தேர்வுகள் ரத்துசெய்யப்படுகின்றன. அனைவரும்தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் அளிக்கப்படும்.

கல்லூரிகளில் இறுதி ஆண்டு அல்லது இறுதிப் பருவத்தில் படிக்கும் மாணவர்களுக்கு வரும் செப்டம்பரில் தேர்வு நடத்தப்படும். மாணவர்களின் எதிர்கால வேலை வாய்ப்புகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2020-21-ம் கல்வி ஆண்டிற்கான மருத்துவ, பொறியியல், வேளாண் பொது நுழைவுத்தேர்வு ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெறும். கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை ஆகஸ்டில் தொடங்கலாம். வரும் செப்டம்பர்1-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

பெங்களூருவில் நேற்று ஒரே நாளில் 26 போலீஸாருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்ட போலீஸாரின் எண்ணிக்கை 470 ஆக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

41 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்