கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். தற்போது நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக 2.31 இலட்சம் பேர் நோயிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள். குணமடைவோர்விகிதம் கிட்டத்தட்ட 63 சதவீதம் ஆகும்.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
கோவிட்-19 நோய் வராமல் தடுப்பதற்காகவும், நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காகவும், மத்திய, மாநில அரசுகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைந்த, முன்னெச்சரிக்கை தொடர் நடவடிக்கைகள் பலவற்றை எடுத்து வருகின்றன.
கட்டுப்பாட்டு மண்டலங்களில் விதிமுறைகளை மிகப் பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்துவது, தீவிரமான கண்காணிப்புப் பணிகள், உரிய காலத்தில் பரிசோதனை செய்து நோயைக் கண்டறிதல், கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திறம்பட மருத்துவ சிகிச்சை அளித்தல் ஆகியவற்றின் காரணமாக கோவிட்- 19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். இதுவரை 5,15,385 கோவிட் நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
தற்போது நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை விட 2,31,978 பேர் நோயிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள்.இந்த இடைவெளியின் காரணமாக குணமடைவோர் சதவிகிதம் 62.78 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட 19870 பேர் குணமடைந்து, மருத்துவமனைகளிலிருந்து அனுப்பப்பட்டுள்ளனர்.
மொத்தம் 2 லட்சத்து 83 ஆயிரத்து 407 பேருக்கு கோவிட்-19 நோய் பாதிப்பு உள்ளது. இவர்களில் தீவிரமான பாதிப்புக்குள்ளானவர்கள் மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளிலும், நோய் அறிகுறி உள்ள நோயாளிகளும், மிதமான அறிகுறிகள் உள்ளவர்களும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பதிவு செய்யப்பட்ட அனைத்து மருத்துவர்களும் கோவிட்-19 நோய் பரிசோதனை செய்து கொள்ள பரிந்துரை செய்யலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது; ஆர் டி பி சி ஆர் தவிர ராபிட் ஆன்டிஜென் பாயின்ட் ஆப் கேர் டெஸ்டிங் பரிசோதனை முறையை அறிமுகப்படுத்தியது போன்ற சமீபத்திய கொள்கை அளவிலான மாற்றங்களால் நாட்டில் கோவிட்-19 நோய்க்கான பரிசோதனைகளைப் பெருமளவு அதிகரித்துள்ளது. இதுவரை ஒரு கோடியே 13 லட்சத்து 7002 மாதிரிகள், இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் கீழ் நாட்டிலுள்ள 1180 பரிசோதனை ஆய்வுக் கூடங்கள் - பொது மற்றும் தனியார் மருத்துவ ஆய்வுக்கூடங்கள் மூலமாக சேகரிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டுள்ளன.
பொதுத்துறைப் பிரிவில் உள்ள ஆய்வுக்கூடங்கள் 841 ஆய்வுக்கூடங்களாக அதிகரித்துள்ளன. தனியார் ஆய்வுக்கூடங்களும் மொத்தம் 339 ஆய்வுக்கூடங்களாக அதிகரித்துள்ளன.
நேற்று ஒரு நாள் மட்டும் 2 லட்சத்து 82 ஆயிரத்து 511 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை நாட்டில் ஒரு மில்லியன் மக்களில் பரிசோதனை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8193 ஆக உள்ளது.
ட்ரூநாட் அடிப்படையிலான பரிசோதனை ஆய்வுக்கூடங்கள் 463 (அரசு 420 தனியார் 43)
சி பி என் ஏ ஏ டி அடிப்படையிலான பரிசோதனை ஆய்வுக்கூடங்கள் 97 (அரசு 35 தனியார் 62)
ரியல் டைம் ஆர்டிபிசிஆர் அடிப்படையிலான பரிசோதனை ஆய்வுக் கூடங்கள் 620 (அரசு 386 தனியார் 234 )
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago