இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 4 நாட்களில் ஒரு லட்சம் பேர் பாதி்க்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் 22 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 27 ஆயிரத்து 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 8 லட்சத்து 20 ஆயிரத்து 916 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்து, 5 லட்சத்து 15 ஆயிரத்து 386 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 83 ஆயிரத்து 407 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் 519 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 22 ஆயிரத்து 123 அதிகரித்துள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை 7 லட்சத்தைத் தொட்ட கரோனா பாதிப்பு, அடுத்த 4 நாட்களில் 8 லட்சமாக அதிகரித்துள்ளது. கரோானா பாதிப்பில் ஒரு லட்சத்தை எட்டுவதற்கு 110 நாட்கள் ஆன நிலையில், அடுத்த 52 நாட்களில் 8 லட்சத்தை எட்டியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் மட்டும் ஏறக்குறைய 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஜூலை மாதத் தொடக்கத்திலிருந்து நாள்தோறும் 20 ஆயிரத்துக்கு குறைவில்லாமல் புதிதாக கரோனா நோயாளிகள் உருவாகி வந்தனர்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 226 பேர் உயிரிழந்துள்ளனர். அதைத்தொடர்ந்து தமிழகத்தில் 64 பேர், கர்நாடகாவில் 57 பேர், டெல்லியில் 42 பேர், உத்தரப்பிரதேசத்தில் 27 பேர், மேற்கு வங்கத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்
ஆந்திராவில் 15 பேர், குஜராத்தில் 14 பேர், தெலங்கானாவில் 8 பேர், ராஜஸ்தானில் 6 பேர், அசாம், ஜம்மு காஷ்மீரில் தலா 5 பேர், பிஹார், மத்தியப்பிரதேசம், ஒடிசா, பஞ்சாப் மாநிலங்களில் தலா 4 பேர் பலியாகியுள்ளனர்.
ஹரியாணா, புதுச்சேரியில் தலா 3 பேர், சத்தீஸ்கரில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 9,893 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 3,300 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 2,022 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 1,829 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 880 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 638 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 889 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 497 ஆகவும் அதிகரித்துள்ளது.
தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 339 ஆகவும், ஹரியாணாவில் 287 ஆகவும், ஆந்திராவில் 292 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 543 பேரும், பஞ்சாப்பில் 187 பேரும் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 159 பேரும், பிஹாரில் 119 பேரும், ஒடிசாவில் 56 பேரும், கேரளாவில் 27 பேரும், உத்தரகாண்டில் 46 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 11 பேரும், ஜார்க்கண்டில் 23 பேரும், அசாமில் 27 பேரும், அருணாச்சலப் பிரதேசம் 2 பேரும், மேகாலயாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 17 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 461 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,32,625ஆக உயர்ந்துள்ளது.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 261 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 82,324 ஆகவும் அதிகரித்துள்ளது.
டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,09,140 பேராக அதிகரித்துள்ளது. 84,694 பேர் குணமடைந்துள்ளனர்.
4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 40,069 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28,147 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 23,174 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 16,657 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 33,700 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 27,109 பேரும், ஆந்திராவில் 25,422 பேரும், பஞ்சாப்பில் 7,357 பேரும், தெலங்கானாவில் 32,224 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 9,888 பேர், கர்நாடகாவில் 33,418 பேர், ஹரியாணாவில் 19,934 பேர், பிஹாரில் 14,575 பேர், கேரளாவில் 6,950 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,820 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒடிசாவில் 11,956 பேர், சண்டிகரில் 539 பேர், ஜார்க்கண்டில் 3,419 பேர், திரிபுராவில் 1,918 பேர், அசாமில் 14,600 பேர், உத்தரகாண்டில் 3,373 பேர், சத்தீஸ்கரில் 3,767 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 1,140 பேர், லடாக்கில் 1,064 பேர், நாகாலாந்தில் 732 பேர், மேகாலயாவில் 207 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாதர் நகர் ஹாவேலியில் 411 பேர், புதுச்சேரியில் 1,272 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 637 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 226 பேர், சிக்கிமில் 134 பேர், மணிப்பூரில் 1,582 பேர், கோவாவில் 2,251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் 335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago