தோல் நோய்களில் மிகவும் மோசமானது என்று சொல்லப்படும் சோரியாசிஸ் நோய்க்கு வழங்கப்படும் இடோலிஜுமாப்(Itolizumab) மருந்தை கரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் வழங்க இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. சந்தையில் இந்த மருந்து அல்ஜூமாப் என்ற பெயரில் விற்கப்படுகிறது.
கரோனா வைரஸால் மிதமானது முதல் தீவிரமாந சுவாச ரீதியான பிரச்சினை, அறிகுறிகள் இருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே இந்த இடோலிஜுமாப் மருந்து மருத்துவர்கள் தீவிர ஆலோசனைக்குப்பின் பரிந்துரைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கெனவே கரோனா நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன், மெதில்பிரட்னிசோலன் மருந்துகளை இந்திய மருத்து கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை செய்த நிலைில் தற்போது இடோலிஜுமாப் மருந்தையும் பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் மருத்துவர் வி.ஜி.சோமானி, வெளியிட்ட அறிவிப்பில் “ கரோனா வைரஸ் நோயாளிகளின் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் சோரியாசிஸ் நோய்க்கு வழங்கப்படும் இடோலிஜுமாப் மருந்தை வழங்க பரிந்துரைத்துள்ளோம். தீவிரமான மற்றும் மிதமான சுவாசக் கோளாறு உள்ள கரோனா நோயாளிகளுக்கு அவசர நேரத்தில் மட்டுமே மருத்துவர்கள் இந்த மருந்தை பரிந்துரைக்க வேண்டும்.
கரோனா நோயாளிகளுக்கு பலருக்கும் இடோலிஜுமாப் மருந்தை செலுத்தி பரிசோதித்தபின், நுரையீரல் சிறப்பு சிகிச்சைவல்லுநர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவ வல்லுர்கள், எய்ம்ஸ் சிறப்பு மருத்துவர்கள் ஆகியோரின் தீவிர ஆலோசனைக்குப்பின்புதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது
பயோகான் நிறுவனம் தயாரிக்கும் இடோலிஜுமாப் மருந்துகள் நீண்டகாலமாகவே சோரியாசிஸ் தோல் நோய்க்கு வழங்கப்பட்டு வருபவையாகும்.
இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்துள்ளது, உயிரிழப்பு 22 ஆயிரத்தை எட்டியுள்ள நிலையில் கரோனா சிகிச்சைக்கான வழிகாட்டலில் மாற்றத்தை மத்திய சுகாதாரத்துறை செய்துள்ளது
கடந்த மாதம் 13-ம் தேதி ஆன்டி-வைரல்மருந்தான ரெம்டெசிவிர் கலவையான, கோபிஃபார் மருந்தை பயன்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதித்தது. ஏற்கெனவே ரெம்டெசிவிர் மருந்தும் கரோனா சிகிச்சையில் பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே தொடக்கத்தில் மலேரியா நோய் தடுப்பு மாத்திரையான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை கரோனா நோயாளிகளுக்கு வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டு பின்னர் அதை மத்திய சுதகாதாரத்துறை அமைச்சகம் நிறுத்தி, ஆபத்தான நிலையில் நோயாளிகள் இருக்கும்போது வழங்கிடக்கூடாது, தொடக்க நிலையில் இருக்கும்போது வழங்கலாம் என மாற்றியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago