சீன எல்லை நிலவரம் குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு

By செய்திப்பிரிவு

கிழக்கு லடாக் பகுதியில் கடந்த மே மாத தொடக்கத்தில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்

கள் தடுத்து நிறுத்தினர். இதனால் போர் பதற்றம் அதிகரித்து 2 நாடுகள் தரப்பில் எல்லையில் வீரர்களும் ஆயுதங்களும் குவிக்கப்பட்டன.

கடந்த 30-ம் தேதி இரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் பதற்றத்தை தணித்து எல்லையில் படைகளை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக லடாக் எல்லைப் பகுதிகளில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு சீன ராணுவ வீரர்கள் பின்வாங்கியுள்ளனர். இந்நிலையில் சீன எல்லை நிலவரம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நராவனே, விமானப் படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதாரியா, கடற்படை தளபதி கரம்பிர் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

எல்லையில் இந்திய ராணுவத்தின் தயார் நிலை குறித்து நராவனே, அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தார். லடாக் மட்டுமன்றி அருணாச்சல பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம் மாநிலங்களின் சீன எல்லைப்பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக நராவனே தெரிவித்தார்.

இந்த வார இறுதி அல்லது அடுத்த வாரத்தில் இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் 4-வது முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதில் இந்திய தரப்பில் எடுத்துரைக்க வேண்டிய வாதங்கள் குறித்து கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்