ஆசியாவின் மிகப்பெரிய சூரியசக்தி திட்டம்; சுயசார்பு இந்தியா தொலைநோக்கை வலுப்படுத்தும்: அமித் ஷா நம்பிக்கை

By செய்திப்பிரிவு

ஆசியாவின் மிகப்பெரிய சூரியசக்தி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதன் மூலம் சுயசார்பு இந்தியா தொலைநோக்கு வலுப்பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

ஆசியாவின் மிகப்பெரிய 750 மெகாவாட் ரேவா சூரியசக்தி திட்டத்தை நாட்டுக்கு அர்பணித்ததற்காக பிரதமர்நரேந்திர மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நன்றி தெரிவித்துள்ளார்.

அமித் ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்த முக்கியமான எதிர்காலத்துக்குப் பயனளிக்கும் திட்டம் மோடி அரசின் சுயசார்பு இந்தியா தொலைநோக்கை வலுப்படுத்தும் என்று கூறியுள்ளார்.

2022-ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை ரேவா சூரியசக்தித் திட்டம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது என மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டுள்ள ‘750 மெகாவாட் ரேவா சூரியசக்தித் திட்டம்’ வருங்காலத்தில் இந்தியாவை எரிசக்திப் பாதுகாப்பில் தன்னிறைவு பெற்ற நாடாக உருவாக்கும் முயற்சியில் மேலும் ஒரு படியாகும்.

2015 நவம்பர் 30-ஆம் தேதி , பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்ற மாநாட்டின் 21-வது அமர்வில், பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச சூரியசக்திக் கூட்டணியை தொடங்கி வைத்தார்.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்