இந்தியாவில் கரோனா பாதிப்பு 8 லட்சத்தை நெருங்குகிறது; குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தொடுகிறது:26 ஆயிரம் பேருக்கு பாஸிட்டிவ்

By பிடிஐ

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் 26 ஆயிரத்து 506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கையும் 5 லட்சத்தை தொடுகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் 26 ஆயிரத்து 506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்து 93 ஆயிரத்து 802 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 95 ஆயிரத்து 513 ஆக உயர்ந்து, மீள்வோர் சதவீதம் 62.42 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 76 ஆயிரத்து 685 ஆக அதிகரித்துள்ளது

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் 475 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்து 604 ஆக அதிகரித்துள்ளது. இதில் மகாராஷ்டிராவில் மட்டும் நேற்று அதிகபட்சமாக 219 பேர் உயிரிழந்தனர். அடுத்ததாக தமிழகத்தில் 65பேர், டெல்லியில் 45 பேர், மேற்கு வங்கத்தில் 27 பேர் உயிரிழந்தனர்

உத்தரப்பிரதேசத்தில் 17 பேர், கர்நாடகாவில் 16 பேர், குஜராத்தில் 15பேர், ஆந்திராவில் 13 பேர், ராஜஸ்தானில் 9 பேர் பலியானார்கள். பிஹாரில் 8 பேர், தெலங்கானாவில் 7 பேர், அசாமில் 6 பே்ர, ஹரியானா, மத்தியப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களில் தலா 5 பேர் உயிரிழந்தனர்.

ஒடிசாவில் 4 பேர், சத்தீஸ்கர், கோவா, ஜார்க்கண்ட், மேகாலயாவில் தலா ஒருவர் பலியானார்கள்
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 9,667 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 3,258 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 2,008 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 1,765 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 854 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 634 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 862 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 491 ஆகவும் அதிகரித்துள்ளது.
தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 331 ஆகவும், ஹரியாணாவில் 287 ஆகவும், ஆந்திராவில் 277 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 486 பேரும், பஞ்சாப்பில் 183 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 154 பேரும், பிஹாரில் 115 பேரும், ஒடிசாவில் 52 பேரும், கேரளாவில் 27 பேரும், உத்தரகாண்டில் 46 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 11 பேரும், ஜார்க்கண்டில் 23 பேரும், அசாமில் 22 பேரும், அருணாச்சலப் பிரதேசம் 2 பேரும், மேகாலயாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 14 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 599 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,27,259 ஆக உயர்ந்துள்ளது.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 581 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 78,161 ஆகவும் அதிகரித்துள்ளது.

டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,047,051 பேராக அதிகரித்துள்ளது. 82,226 பேர் குணமடைந்துள்ளனர்.

4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 39,194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 27,718 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 22,563 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 16,341 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 32,362 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 25,911 பேரும், ஆந்திராவில் 23,814 பேரும், பஞ்சாப்பில் 7,140 பேரும், தெலங்கானாவில் 30,946 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 9,501 பேர், கர்நாடகாவில் 31,105 பேர், ஹரியாணாவில் 19,369 பேர், பிஹாரில் 13,944 பேர், கேரளாவில் 6,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,708 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 11,201 பேர், சண்டிகரில் 523 பேர், ஜார்க்கண்டில் 3,246 பேர், திரிபுராவில் 1,776 பேர், அசாமில் 13,336 பேர், உத்தரகாண்டில் 3,305 பேர், சத்தீஸ்கரில் 3,635 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 1,140 பேர், லடாக்கில் 1,055 பேர், நாகாலாந்தில் 673 பேர், மேகாலயாவில் 113 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாதர் நகர் ஹாவேலியில் 411 பேர், புதுச்சேரியில் 1,151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 584 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 197 பேர், சிக்கிமில் 134 பேர், மணிப்பூரில் 1,450 பேர், கோவாவில் 2,151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் 302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்