நாடுமுழுவதும் கரோனா பரவல்; தடமறிதல்: மீண்டும் ஆய்வு நடத்த ஐ.சி.எம்.ஆர். திட்டம்

By செய்திப்பிரிவு

நாடுமுழுவதும் கரோனா பரவல் தொடர்பாக மீண்டும் ஆய்வு நடத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் பிறகு ஊரடங்கு தளர்வும் அமல் படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஜூன் மாதத்திலும் ஊரடங்கு தளர்வு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் பல பகுதிகளிலும் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து தினமும் நடைபெறும் மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதுவரையில் 1,07,40,832 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் ஐ.சி.எம்.ஆர். தீவிர முயற்சிகள் காரணமாக மருத்துவப் பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அரசு ஆய்வகங்கள் 805, தனியார் ஆய்வகங்கள் 327 என மொத்த ஆய்வகங்களின் எண்ணிக்கை 1132 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் கரோனா பரவும் வேகம் அதன் தடமறிதல் குறித்து ஆய்வு செய்வதற்காக ஐ.சி.எம்.ஆர் ஏற்கெனவே ஆய்வு நடத்தியது. நாடுமுழுவதும் ஏப்ரல் மாதத்தில் 60 மாவட்டங்களில் கணக்கெடுப்பு நடத்தியது.

இதன் முடிவுகளின் அடிப்படையில் பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. எனினும் அந்த ஆய்வு முடிவுகளை வெளியிடவில்லை. எனினும் கரோனாவின் போக்கை கண்டறிவதில் இந்த கணக்கெடுப்பு முக்கிய பங்காற்றுவதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கரோனா பரவல் தொடர்பாக மேலும் ஒரு ஆய்வை நடத்த ஐ.சி.எம்.ஆர் முடிவெடுத்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

மேலும்