திருப்பதி சேஷாசலம் வனப்பகுதி யில் செம்மரக் கடத்தல் தொழிலா ளர்கள் தாக்கியதைத் தொடர்ந்து, அவர்கள் மீது போலீஸார் நேற்று முன்தினம் துப்பாக்கிச் சூடு நடத்தி 4 பேரை கைது செய்தனர். மேலும் 70 செம்மரங்களை பறிமுதல் செய் துள்ளனர்.
திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் கடந்த மே மாதம் 7-ம் தேதி 20 தமிழக கூலி தொழி லாளர்களை செம்மரம் கடத்திய தாகக் கூறி ஆந்திர அதிரடி போலீஸார் சுட்டுக் கொன்றனர். ஆனாலும் செம்மரக் கடத்தல் முற்றிலும் ஓயவில்லை.
தமிழகம், ஆந்திர மாநிலத் தைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து செம்மரங்களை கடத்தி வருகின்ற னர். இதனால் சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரக் கடத்தல் கூலி தொழிலாளர்களுக்கும் போலீ ஸாருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஏற்கெனவே என்கவுன்ட்டர் நடந்த ஈத்த மாகுல குண்டாவுக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பழைய மண்டபம் பகுதியில் செம்மரக் கடத்தல் கும்பல் நடமாட்டம் உள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆயுதப்படை போலீ ஸார் 15 பேர், நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் அப்பகுதிக்குச் சென்றனர்.
அங்கு, செம்மரங்களை வெட்டி கடத்துவதற்கு தயாராக இருந்த 200-க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள், போலீஸாரைக் கண்டதும், சுற்றி வளைத்து கற்களாலும், கோடரிகளாலும் தாக்க தொடங்கியதாகக் கூறப் படுகிறது.
இதையடுத்து, போலீஸாரும் 4 ரவுண்டு துப்பாக்கியால் சுட் டுள்ளனர். இதனால் தொழிலா ளர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.
4 பேர் கைது
இவர்களில் 4 பேரை போலீ ஸார் துரத்திப் பிடித்து கைது செய்து, அவர்களை ரகசிய இடத் தில் வைத்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
மேலும் அந்த இடத்தில் இருந்த 70 செம்மரங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த என்கவுன்ட்டரில் போலீஸ் கான்ஸ்டபிள் சிம்மாத்ரி படுகாய மடைந்தார். அவர் இப்போது திருப்பதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவான தொழிலாளர்களை ஆயுதப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
1 day ago