8 போலீஸாரைச் சுட்டுக்கொன்ற கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த உத்தரப் பிரதேசத்தின் பிரபல ரவுடி விகாஸ் துபே மத்திய பிரதேசத்தில் உஜ்ஜயினியில் உள்ள கோயிலில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
விகாஸ் துபேயின் தாயார் தன் மகன் கைது செய்யப்பட்டது தொலைக்காட்சி செய்திகள் மூலம்தான் தனக்குத் தெரியவந்தது என்றார்.
விகாஸ் துபேயின் வயதான தாயாரின் பெயர் சரளா தேவி, இவர் தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்குக் கூறும்போது தன் மகன் செய்த தவறுகளுக்கான சரியான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றார்.
“மஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் என் மகன் மஹாகாலர் கோயிலுக்கு செல்வான்.
» கரோனா தாக்குதலில் இருந்து ஆயிரக்கணக்கானோரின் உயிரை பாதுகாத்துள்ளோம்: பிரதமர் மோடி பேச்சு
» இந்தியாவில் கரோனா சமூக பரவலாக மாறவில்லை: ஹர்ஷ வர்த்தன் மீண்டும் உறுதி
அரசு எது சரியானதோ அந்த நடவடிக்கைகளை என் மகனுக்கு எதிராக எடுக்க வேண்டும். இப்போது விகாஸ் பாஜகவில் இல்லை சமாஜ்வாதியில் இருக்கிறான்” என்றார்.
ஆனால் இதற்கு முன்னால் ஒரு நேர்காணலில் அவர் தன் மகனை என்கவுண்ட்டரில் கொன்று விட வேண்டும் என்று கூறியிருந்தார்.
கான்பூரில் 8 போலீஸாரை சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிய விகாஸ் துபே உபி போலீஸாரால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்தார். இதற்கு உதவியாக டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் ம.பி போலீஸாரும் இருந்தனர்.
இந்நிலையில், எவரும் எதிர்பாராதபடி விகாஸ் துபே இன்று காலை உஜ்ஜைன் நகரின் பிரபல மஹாகாலபைரவர் கோயிலுக்கு வந்துள்ளார். இவரை அக்கோயிலின் காவலரான லக்கன் யாதவ், எந்த ஆயுதங்களும் இன்றி வெறும் கைகளால் மடக்கிப் பிடித்து மபி போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இவரது கைதில் சர்ச்சைகள் எழுந்துள்ளன, இவரை போலீசார் கைது செய்தனரா அல்லது அவரே சரணடைந்தாரா என்று அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago