இந்தியாவில் கரோனா சமூக பரவலாக மாறவில்லை: ஹர்ஷ வர்த்தன் மீண்டும் உறுதி

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா சமூக பரவலாக மாறவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் பிறகு ஊரடங்கு தளர்வும் அமல் படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஜூன் மாதத்திலும் ஊரடங்கு தளர்வு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் பல பகுதிகளிலும் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் செய்தியாளர்களை சந்தித்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:

‘‘இன்றைய எங்கள் ஆய்வுக்கூட்டத்தில் நிபுணர்களுடன் விவாதித்தோம். இந்தியாவில் கரோனா சமூக பரவலாக மாறவில்லை என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

அந்தந்த பகுதிகளில் சில இடங்களில் கரோனா தீவிரமாக பரவி வருகிறது. ஆனால் இது உள்ளூர் அளவில் தான் உள்ளது. ஆனால் நாடுதழுவிய அளவில் இது சமூக பரவல் எனக் கூற முடியாது’’ எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்