இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு 7.50 லட்சத்தைக் கடந்தது; உயிரிழப்பு 21 ஆயிரமாக அதிகரிப்பு: 24 மணிநேரத்தில் 487 பேர் பலி

By ஏஎன்ஐ


இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸுக்கு 487 பேர் உயிரிழந்ததையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும், 7.50 லட்சத்தைவிட அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸால் புதிதாக 24 ஆயிரத்து 879 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 67 ஆயிரத்து 296 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 7-வது நாளாக கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 76 ஆயிரத்து 378 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 69 ஆயிரத்து 789 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிேநரத்தில் கரோனா வைரஸால் 487 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 21 ஆயிரத்து129 ஆக அதிகரி்த்துள்ளது

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 9,448 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 3,213 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 1,993 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 1,700 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 827 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 629 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 845 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 482 ஆகவும் அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 324 ஆகவும், ஹரியாணாவில் 279 ஆகவும், ஆந்திராவில் 264 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 470 பேரும், பஞ்சாப்பில் 178 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 149 பேரும், பிஹாரில் 107 பேரும், ஒடிசாவில் 48 பேரும், கேரளாவில் 27 பேரும், உத்தரகாண்டில் 43 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 11 பேரும், ஜார்க்கண்டில் 22 பேரும், அசாமில் 16 பேரும், அருணாச்சலப் பிரதேசம் 2 பேரும், மேகாலயாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 14 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 23 ஆயிரத்து 764 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,23,292 ஆக உயர்ந்துள்ளது.

2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 350 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 74,167 ஆகவும் அதிகரித்துள்ளது.

டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,04,864 பேராக அதிகரித்துள்ளது. 78,199 பேர் குணமடைந்துள்ளனர்.
4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 38,333 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 27,289 பேர் குணமடைந்தனர்.

ராஜஸ்தானில் 22,063 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 16,036 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 36,156 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 24,823 பேரும், ஆந்திராவில் 22,259 பேரும், பஞ்சாப்பில் 6,907பேரும், தெலங்கானாவில் 29,536 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 9,261 பேர், கர்நாடகாவில் 28,877 பேர், ஹரியாணாவில் 18,690 பேர், பிஹாரில் 13,189 பேர், கேரளாவில் 6,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,559 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 10,624 பேர், சண்டிகரில் 513 பேர், ஜார்க்கண்டில் 3,096 பேர், திரிபுராவில் 1,704 பேர், அசாமில் 13,336 பேர், உத்தரகாண்டில் 3,230 பேர், சத்தீஸ்கரில் 3,525 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 1,101 பேர், லடாக்கில் 1,041 பேர், நாகாலாந்தில் 657 பேர், மேகாலயாவில் 80 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாதர் நகர் ஹாவேலியில் 408 பேர், புதுச்சேரியில் 1,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 434 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 197 பேர், சிக்கிமில் 125 பேர், மணிப்பூரில் 1,435 பேர், கோவாவில் 2,039 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் 287 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்