கரோனா வைரஸ் லாக்டவுனால் தாயகம் திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை கடல்மார்க்கமாக அழைத்து வர செயல்படுத்தப்பட்ட சமுத்திர சேது ஆபரேஷன் முடிந்தது என்று கப்பற்படை அறிவித்துள்ளது
கடந்த மே மாதம் 5-ம் தேதி தொடங்கிய சமுத்திர சேது ஆப்ரேஷனில் இதுவரை 3 நாடுகளி்ல இருந்து 4 ஆயிரம் இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர் என்று கப்பற்படை தெரிவித்துள்ளது
இதுகுறித்து கப்பற்படை வெளியிட்ட அறிவிப்பில் “ கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால், பல்வேறு நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் தாயகம் வரமுடியாமல் தவித்தனர். அவர்களை மீட்டு தாயகத்துக்கு கடல்மார்க்கமாக அழைத்து வர மத்திய அரசு சமுத்திர சேது ஆபரேஷனை செயல்படுத்தியது.
கடந்த மே 5-ம் தேதி இந்த சமுத்திரசேது ஆபரேஷன்தொடங்கியது.இந்த ஆபரேஷனில் இந்திய கடற்படையின் ஜலஸ்வா, ஐராவத், ஷர்துல் மற்றும் மாகர் ஆகிய கப்பல்கள் ஈடுபட்டன. ஏறக்குறைய 55 நாட்களாக நடந்த மீட்புப்பணியில் கப்பல்கள் 23 ஆயிரம் கிலோமீட்டர்கள் கடல்வழியாக பயணித்துள்ளன.
இதில் 5 கப்பல்கள் மாலத்தீவுகளில் மாலேவுக்கும், ஈரானின் பந்தர் அப்பாஸ் நகருக்கு இரு கப்பல்களும், இலங்கையின் கொழும்பு நகருக்கு ஒரு கப்பலும் சென்றன. கூடுதலான காற்றோட்டம், பாதுகாப்பான சூழல் காரணமாக, கப்பல் மற்றும் கடற்படையினர் மீது குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை கரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.
கப்பல்களின் இயக்க சூழலுக்கு தனித்துவமான மருத்துவ மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளும், கடுமையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டன. 3 நாடுகளில் இருந்து சமுத்துரசேது ஆபரேஷன் மூலம் 3 ஆயிரத்து 992 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்த ஆப்ரேஷனுக்கு பயன்படுத்தப் பட்ட கப்பல்கள் இதற்காகவே தேர்வு செய்யப்பட்டன, கரோனா நோயாளிகளை எதிர்கொள்ளும் வகையில் தேவையான பாதுகாப்பு அம்சங்கள் ,மருத்துவ வசதிகள் கப்பலில் செய்யப்பட்டு இருந்தன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சமுத்திரசேது ஆபரேஷன் திட்டத்தை மத்திய வெளியுறுத்துறை அமைச்சகம்,சுகாதாரத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம், மாநில அரசுகள் என இணைந்து மேற்கொண்டன.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago