வேறு மாநில நீதிமன்றங்களில் சரணடைய முயலும் விகாஸ் துபே: தீவிரத் தேடலில் உ.பி.யுடன் இணைந்தது டெல்லி, ஹரியாணா போலீஸ்

By ஆர்.ஷபிமுன்னா

உத்திரப்பிரதேச மாநில காவல்துறையினரால் முக்கிய முதல் குற்றவாளிகாகத் தேடப்பட்டு வரும் விகாஸ் துபே, டெல்லி அல்லது ஹரியாணா நீதிமன்றங்களில் சரணடைய முயல்கிறார். இவ்விரண்டு மாநிலக் காவல்துறையிடரும் உ.பி. போலீஸாருடன் இணைந்து தேடலில் இறங்கி உள்ளனர்.

கான்பூர் ஊரகப்பகுதியின் பிக்ரு கிராமத்தில் கிரிமினல் விகாஸ் துபேயுடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 8 போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் ஒரே இரவில் உ.பி.யின் கிரிமினல்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார் விகாஸ் துபே.

இவரை பிடிக்க உ.பி. காவல்துறையின் அறுபதிற்கும் மேற்பட்ட படையினர் இறங்கி உள்ளனர். இந்த சூழலில் இவர்களிடம் சிக்காத விகாஸ் துபே டெல்லி அல்லது ஹரியாணா மாநில நீதிமன்றங்களில் சரணடைய முயன்று வருகிறார்.

இதற்காக, டெல்லி எல்லையின் உள்ள ஹரியாணாவின் பரீதாபாத்தில் உள்ள ஒரு சாதாரண விடுதியில் விகாஸ் தங்கி இருந்தார். இந்த தகவல் அறிந்து உ.பி. அதிரடிப் படையினர் அங்கு செல்வதற்குள் விகாஸ் சில நிமிடங்கள் முன்பாக தப்பி விட்டார்.

அவருடன் தங்கியிருந்த மூவரை உ.பி. போலீஸார் பிடித்து விசாரணை செய்வதாகக் கூறப்படுகிறது. இவர்களை பிடிப்பதற்காக அங்கு துப்பாக்கி சூடும் நடைபெற்றதாக ஓசை வந்ததை உ.பி. காவல்துறை மறுத்துள்ளது.

தப்பிச்சென்ற விகாஸின் பல்வேறு சிசிடிவி கேமிரா பதிவுகளும் உ.பி. போலீஸார் கைப்பற்றி ஆராய்கிறது. இதில் விகாஸ் பரீதாபாத்தின் ஒரு இனிப்பு கடையின் நிற்பதும், ஆட்டோ பிடித்து கிளம்பிச் சென்றதும் பதிவாகி உள்ளது.

தற்போது, உபி போலீஸாருடன் டெல்லி மற்றும் ஹரியாணா மாநில காவல்துறையினரும் விகாஸ் துபேயின் தேடலில் இறங்கி உள்ளனர். இவர்கள் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் பல இடங்களில் சோதனை நடத்தி கிரிமினலான விகாஸை தேடி வருகின்றனர்.

கடந்த ஜுலை 2 இரவில் தன்னை பிக்ரு கிராமத்தில் பிடிக்க வந்த தேவேந்திரா டிஎஸ்பி தலைமையிலான படையினர் மீது விகாஸ் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில், டிஎஸ்பி, 2 துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட 8 பேர் பலியாகினர்.

இதனால் தனது எதிர்கட்சியினராலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளான உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு நெருக்கடிக்கு உள்ளாகி விட்டது. எப்படியாவது விகாஸ் துபேயை உடனடியாகப் பிடிக்க காவல்துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் காரணமாக தாம் உ.பி. போலீஸாரிடம் பிடிபட்டால் சுட்டுக் கொல்லப்பட்டு விடுவோம் என்ற அச்சம் விகாஸ் துபேக்கு எழுந்துள்ளது. இதில் இருந்து உயிர் தப்ப ஹரியானா அல்லது டெல்லி மாநிலங்களின் ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் சரணடைய விகாஸ் திட்டமிட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

பல்வேறு குற்றச்செயல்கள் புரிந்த விகாஸ் துபேவிற்கு, உ.பி. மாநில காவல்துறை மற்றும் அரசியல்வாதிகளில் குறிப்பிட்டவர்கள் ஆதரவு இருந்துள்ளது. இதனால் துபே, ஜூன் 2 ஆம் தேதி வரை உபியின் முக்கியக் கிரிமினல் பட்டியலில் இடம் பெறாமல் இருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்