எல்லை கட்டமைப்பு பணிகளின் முன்னேற்றம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் மறு ஆய்வு

By செய்திப்பிரிவு

பாகிஸ்தானுடனான கட்டுப்பாடு எல்லைக் கோடு மற்றும் சீனாவுடனான உண்மையான எல்லைக் கோடு பகுதியில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் நடைபெற்று வரும் பணிகள்மற்றும் அவற்றின் முன்னேற்றம்குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் எல்லைசாலைகள் நிறுவன (பிஆர்ஓ) தலைவர் ஹர்பால் சிங் விளக்கினார். இந்த ஆலோசனை சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.

கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய – சீன வீரர்களிடையே மோதல் ஏற்படுவதற்கு எல்லைப் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை இந்தியா மேம்படுத்தி வருவதே காரணம், கிழக்கு லடாக்கில் கல்வான் நதி மீது இந்தியா60 மீட்டர் நீள பாலம் கட்டியுள்ளதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. எல்லையில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் இந்தியகாலாட் படையினர் அப்பகுதிகளுக்கு விரைவாக செல்லவும் இந்தப் பாலம் அவசியம் ஆகும். மேலும் காரகோரம் கனவாய்க்கு தெற்கில் உள்ள இந்தியாவின் கடைசி ராணுவ நிலையான தவுலத்பெக் ஓல்டிக்கு துர்புக்கில் இருந்து செல்லும் 255 கி.மீ. நீள முக்கிய சாலையின் பாதுகாப்புக்கும் இந்தப் பாலம் அவசியம் ஆகும்.கடந்த ஜூன் 15-ம் தேதி மோதலுக்குப் பிறகு அடுத்த சில நாட்களில் இந்தப் பாலப் பணி முடிக்கப்பட்டது.

உத்தராண்ட் மாநிலத்தின் தர்ச்சுலாவில் இருந்து சீன எல்லைக்குஅருகில் உள்ள லிபுலெக் வரை 75 கி.மீ. நீள சாலையை பிஆர்ஓ கடந்த மே மாதம் கட்டிமுடித்தது. மானசரோவர் யாத்திரைக்கான பயண நேரத்தை இந்த சாலை வெகுவாக குறைக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

39 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்