2 போலீஸார் கொலை விவகாரத்தில் இறந்தும் துப்புக் கொடுத்த போலீஸ்காரர்

By செய்திப்பிரிவு

ஹரியாணா மாநிலம் சோனிபட் மாவட்டத்துக்கு உட்பட்ட புடானா காவல் நிலையத்தில் சிறப்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் கப்தான் சிங் (43). இவரும், அதே காவல் நிலையத்தில் காவலராக இருந்த ரவீந்தர் சிங்கும் கடந்த செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் ரோந்து சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த காரில் ரவுடி கும்பலைச் சேர்ந்த சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த கப்தான் சிங், அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறி உள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து அந்த ரவுடிகள் கப்தான் சிங்கையும், காவலர் ரவீந்தர் சிங்கையும் கொன்றுவிட்டு தப்பினர்.

எனினும், காவலர் ரவீந்தர் சிங்கின் இடது கையில் சில எண்கள் எழுதப்பட்டிருந்ததை பிரேதப் பரிசோதனையின்போது மருத்துவர்கள் பார்த்தனர். பின்னர், அந்த எண்ணை ஆய்வு செய்ததில், அது ரவுடி கும்பல் ஒன்று பயன்படுத்தும் காரின் பதிவு எண் என்பதை போலீஸார் கண்டறிந்தனர். அதை வைத்து ரவுடி கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். போலீஸாருடன் நடந்த என்கவுன்ட்டரில் ஒரு ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டார். இறக்கும் தருவாயிலும் துப்புக் கொடுத்த காவலர் ரவீந்தர் சிங்கின் பெயர், உயரிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்