தேசிய அளவில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 61 சதவீதத்தை தாண்டியது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் கோவிட்-19 தொடர்பான சிகிச்சைகளுக்காக மருத்துவ உள்கட்டமைப்பு போதுமான அளவிலும், சிறப்பாகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் உதவி, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் வெண்டிலேட்டர்கள் உட்பட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன.
2020 ஜூலை 7 நிலவரப்படி, மிகக் குறைந்த அளவில் அறிகுறிகள் உள்ளவர்கள் முதல் மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் வரை கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, 1201 மருத்துவமனைகளும், 2611 மருத்துவ கவனிப்பு மையங்களும், 9,909 கொவிட் கவனிப்பு மையங்களும் உள்ளன. இத்தகைய மருத்துவ வசதிகளால், குணமடைவோர் விகிதம் சீராக மேம்பட்டுள்ளதுடன், இறப்பவர் விகிதமும் குறைந்து வருகிறது.
» கல்வான் பள்ளத்தாக்கு மோதல் இடத்திலிருந்து இந்தியப் படைகளும் 1.5 கிமீ தள்ளி வந்தன: அதிகாரிகள் தகவல்
துவக்கத்திலேயே கோவிட்-19 நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சை அளித்து வருவதால் குணமடைவோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 15,515 கொவிட்-19 நோயாளிகள் குணமாகியுள்ளனர். இது வரை 4,39,947 பேர் குணமடைந்துள்ளனர்.
மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொவிட்-19 நோயாளிகள் குணமடையும் விகிதம் 61.13 சதவீதத்தை இன்று எட்டியுள்ளது.
இன்றைய நிலவரப்படி, கொவிட்-19 தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையை விட 1,80,390 அதிகமாகும்.
தற்போது 2,59,557 நோயாளிகள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.
கரோனாவை கண்டறியும் பரிசோதனைச் சாலைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாளொன்றுக்கு 2 லட்சத்திற்கும் கூடுதலான மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,41,430 மாதிரிகள்
பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதனையும் சேர்த்து தேசிய அளவில் கரோனா தொற்றுக்காக பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் மொத்தம் 1,02,11,092 ஆகும்.
தற்போது 1115, கரோனா பரிசோதனைச் சாலைகள் நமது நாட்டில் உள்ளன. இதில் அரசு பரிசோதனைச் சாலைகள் 793, தனியார் பரிசோதனைச் சாலைகள் 322.
· நிகழ்நேர பிசிஆர் (Real Time – RT PCR) அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 598 (அரசு : 372 + தனியார் : 226 ),
· ட்ரூனேட் (TrueNat) அடிப்படையிலானச் சோதனைச் சாலைகள் – 423 (அரசு : 388 + தனியார் : 35)
· CBNAAT அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 94 (அரசு : 33 + தனியார் : 61) ஆகும்.
இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago