இந்திய-சீன படைகளுக்கு இடையே மோதல் நடந்த கிழக்கு லடாக் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து சீனப் படைகள் 2 கிமீ தள்ளிச் சென்றதையடுத்து இந்திய படைகளும் 1.5 கிமீ தொலைவு தள்ளி வந்ததாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய அதிகாரி ஒருவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்த போது, “ மோதல் ஏற்ட்ட பிபி14 என்ற வளைவு வரை இந்தியா சாலை அமைத்துள்ளது. இப்போது இந்தியப் படைகள் எங்கிருந்து நகர்ந்து சென்றதோ அந்தப் பகுதியில்தான் ராணுவம் தன் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளும். இப்போது இந்தியா இந்தப் பகுதியில் ரோந்து மேற்கொள்ள முடியாது. இது நிரந்தர ஏற்பாடாக இருக்க முடியாது என்றே தெரிகிறது” என்றார்.
கல்வானில் தற்போது இரண்டு பகுதிகளிலும் 30 பேர் தான் நிறுத்தப்பட்டுள்ளனர். இருதரப்புக்குமான இடைவெளி 3.6-4 கிமீ ஆகும் இது இருதரப்புக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் அடிப்படையிலானது.
இருநாட்டு படைகளும் அங்கிருந்து தொலைவு கண்டிருப்பதன் முதல் அடிப்படை இரு படைகளும் ஒருவருக்கொருவர் கண்ணுக்குக் கண் தூரத்தில் இருக்கக் கூடாது என்பதே. இதுதான் இந்த ஏற்பாட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்டதாகும். அடுத்த கட்டத்தில் இருதரப்பினரும் 50 பேரை நிறுத்தலாம். ஆகவே கல்வான் மோதல் பகுதியில் 6 கிமீ தொலைவுக்குள் இருதரப்பினரும் 80 பேரை நிறுத்தியுள்ளனர், என்றார் அந்த அதிகாரி.