உலகளவில் ஒரு மில்லியனுக்கு கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை விகிதம் இந்தியாவில் மிக குறைவு என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
ஒரு மில்லியனுக்கு கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று உலக சுகாதார அமைப்பின், 2020 ஜூலை 6 தேதியிட்ட சூழல் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை 505.37 மட்டுமே. அதே சமயத்தில் உலக சராசரியோ 1453.25 ஆகும்.
» அத்தியாவசியப் பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம்: மத்திய அரசு அறிவிப்பு
» உ.பி.யில் கரோனா பரிசோதனை கூடங்கள்: மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை நடவடிக்கை
ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையானது சிலி நாட்டில் 15,459.8 ஆகும். இது பெரு நாட்டில் 9070.8 ஆகவும், அமெரிக்காவில் 8560.5, பிரேசிலில் 7419.1, ஸ்பெயினில் 5358.7 ஆகவும் உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் சூழல் அறிக்கையானது, ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு மிகக் குறைந்த இறப்புகளை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு கோவிட்-19 தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை 14.27 மட்டுமே. அதே நேரத்தில், உலக சராசரி இதை விட 4 மடங்கு அதிகமாக, அதாவது 68.29 ஆக உள்ளது.
பிரிட்டனில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு கரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை 651.4 ஆகும். இது ஸ்பெயினில் 607.1, இத்தாலியில் 576.6, பிரான்சில் 456.7, அமெரிக்காவில் 391 ஆகவும் உள்ளது.
இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago