எல்லை விரிவாக்கம் குறித்த பிரதமர் மோடியின் பேச்சு சீனாவுக்கான எச்சரிக்கை: பன்னாட்டு விவகாரத்துறை வல்லுநர் கருத்து

By செய்திப்பிரிவு

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். சீனா தரப்பிலும் உயிரிழப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் லடாக்கிற்கு திடீர்ப் பயணம் மேற்கொண்ட பிரதமர் அங்கு ஜவான்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது எல்லையை விரிவுபடுத்தும் காலமெல்லாம் ஓய்ந்து விட்டது, இப்போது வளர்ச்சிக்கான காலக்கட்டம், எல்லை விரிவாக்கம் செய்ய நினைக்கும் நாடுகள் அழிவைச் சந்திக்கும் என்று பேசினார்.

இந்நிலையில் சர்வதேச விவகாரங்கள் துறையைச் சார்ந்த வல்லுநர் பிரம்மா செலானி பிரதமரின் லடாக் பேச்சு குறித்து கூறும்போது,
“பதற்றம் நிறைந்த எல்லைப்பகுதிக்கு மோடி பயணம் மேற்கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அவரது பேச்சு பாதுகாப்புப் படையினரின் மன உறுதியை அதிகரித்திருக்கும்.

பிரதமரின் இந்தப் பயணம் சீன ஆக்ரமிப்பு மற்றும் அத்துமீறல்களுக்கான இந்திய எதிர்ப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. எல்லை விரிவாக்கம் குறித்த பிரதமர் மோடியின் கருத்து சீனாவுக்கு ஓர் எச்சரிக்கைதான்.

உலகமே கரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அதைச் சாதகமாக்கி எல்லைகளில் சீனா சாதகமடைய நினைக்கிறது.

பொருளாதாரம், வர்த்தகம் உட்பட அனைத்து துறைகளிலும் சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராக போராட வேண்டியத் தேவை உள்ளது. சீனாவுக்கு எதிராக இந்தியா நிலைப்பாடு எடுக்க வேண்டும், அமெரிக்கா உட்பட சீன எதிர்ப்பு நாடுகளுடன் இந்தியா கைகோர்க்க வேண்டும், என்று பிரம்மா செலானி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்