ஜூன் 15ம் தேதி இந்திய-சீன படைகள் இடையே மோதல் வெடித்த கல்வான் பள்ளத்தாக்கு எல்லைப் பகுதில் சீனப் படைகள் 2 கிமீ தூரம் பின்னால் சென்று விட்டதாக மத்திய அரசு மூத்த அதிகாரி தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்தார்.
ஜூன் 15ம் தேதி கிழக்கு லடாக் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் எய்தினர், சீன படையினருக்கும் உயிரிழப்புகள் அதிகம், ஆனால் சீனா அதிகாரப் பூர்வமாக எந்தத்தகவலையும் இதுவரை இது தொடர்பாக வெளியிடவில்லை.
ஆனால் ஜூன் 15ம் தேதி இருதரப்பினருக்கும் நடந்த இந்த மோதலைத் தொடர்ந்து இருதரப்பிலுமே தற்காலிக கட்டமைப்புகளை எல்லைக்கருகே உருவாக்கினர். சீனாவுடன் கண்ணுக்குக் கண் சந்திக்கும் நிலையில் இந்தியப் படைகளும் இருந்தது
இந்நிலையில் ஜூன்30ம் தேதி கமாண்டர் மட்ட பேச்சுவார்த்தைகள் இருதரப்புக்கும் இடையே நடந்தன. இந்த பேச்சுவாரத்தைகளில் சீனா மேற்கொண்ட வாக்குறுதிகளின் மீது செயல்பட்டுள்ளதா என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது.
» சீனாவிடமிருந்து ஒதுங்கியிருப்பதுதான் நல்லது: பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு ஆலோசனை
» பூடான் எல்லையிலும் சில பகுதிகளை இணைத்து உரிமை கொண்டாடும் சீனா
“கல்வான் பள்ளத்தாக்கில் சண்டை நடந்த இடத்திலிருந்து 2 கிமீ தூரம் சீனப் படைகள் பின்னால் சென்றுவிட்டது. இது தொடர்பாக அந்த இடத்துக்கே சென்று சரிபார்க்கப்பட்டது” என்று மூத்த இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கல்வான், பங்காங் ஸோ, ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய இடங்கள் மற்றும் சீனப் படைகள் குவிக்கப்பட்ட தேப்சங் சமவெளிகள் பகுதிகளை பார்க்க வேண்டியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago