பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்றக் குழுவில் ஒருமுறைகூட ராகுல் காந்தி பங்கேற்காத நிலையில் ராணுவத்தின் வீரம் குறித்து கேள்வி எழுப்பி, தேசத்தை சோர்வடையச்செய்கிறார் என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா சாடியுள்ளார்
கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா, சீனா ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மத்திய அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகிறார். இதற்கு பதிலடியாகவே பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா ட்விட்டரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை கடுமையாகச் சாடி கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்.
அதில் “ ராகுல் காந்தி இதுவரை பாதுகாப்புத்துறைக்கான நடாாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் ஒரு முறைகூட பங்கேற்றது இல்லை. ஆனால், சொல்லவே வருத்தமாக இருக்கிறது, தொடர்ந்து நமது ராணுவ வீரர்களின் வீரத்தைப் பற்றி கேள்வி எழுப்பி, தேசத்தை மனச்சோர்வுக்குள்ளாக்குகிறார். ஒரு பொறுப்புள்ள எதிர்்க்கட்சித் தலைவர் இதுபோன்று செய்யமாட்டார்.
ராகுல்காந்தி புனிதமான அரசபரம்பரையில் வந்தவர். பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை குழுக்களில் பங்கேற்பதெல்லாம் பெரிய விஷயம் அல்ல, உத்தரவிட மட்டுமே செய்கின்றன. நாடாளுமன்ற விவகாரங்களைப் புரிந்துகொள்ள தகுதியான பல உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ளனர், ஆனால் அந்த வாரிசுக் குடும்பம் அத்தகைய தலைவர்களை ஒருபோதும் வளரவிட்டது இல்லை. உண்மையாகவே இது வேதனை” எனத் தெரிவித்துள்ளார்
நட்டாவின் குற்றச்சாட்டுக்கு இன்னும் காங்கிரஸ் கட்சியிலிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago