கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியில் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா 3-வது இடத்துக்கு சென்றது மட்டுமல்லாமல் கரோனாாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்குகிறது.
இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் 24 ஆயிரத்து 248 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 425 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 4-வது நாளாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதி்க்கப்பட்டு வருகின்றனர்
கரோவானால் இதுவரை ஒட்டுமொத்தமாக 6 லட்சத்து 97 ஆயிரத்து 413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 லட்சத்து 24 ஆயிரத்து 432 பேர் குணமடைந்துள்ளனர், 2 லட்சத்து 53 ஆயிரத்து 287 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தோர் சதவீதம் 60.85 ஆக அதிகரித்துள்ளது
கரோனாவால் மோசமாக பாதி்கப்பட்ட நாடுகளில் அமெரி்க்கா, பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் தற்போது இந்தியா இடம் பெற்றுள்ளது. ரஷ்யா 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 8,822 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 3,067 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 1,943 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 1,510 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 757 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 608 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 785 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 456 ஆகவும் அதிகரித்துள்ளது.
தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 295 ஆகவும், ஹரியாணாவில் 265 ஆகவும், ஆந்திராவில் 232 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 372 பேரும், பஞ்சாப்பில் 164 பேரும் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 132 பேரும், பிஹாரில் 95 பேரும், ஒடிசாவில் 36 பேரும், கேரளாவில் 25 பேரும், உத்தரகாண்டில் 42 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 11 பேரும், ஜார்க்கண்டில் 19 பேரும், அசாமில் 14 பேரும், மேகாலயாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 12 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 6 ஆயிரத்து 619 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,11.740 ஆக உயர்ந்துள்ளது.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 62,778 ஆகவும் அதிகரித்துள்ளது.
டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 99,444 பேராக அதிகரித்துள்ளது. 71,359 பேர் குணமடைந்துள்ளனர்.
4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 36,037 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25,892 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 18,662 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 14,930 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 27,707 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 22,126 பேரும், ஆந்திராவில் 18,697 பேரும், பஞ்சாப்பில் 6,283 பேரும், தெலங்கானாவில் 23,952 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 8,429 பேர், கர்நாடகாவில் 23,479 பேர், ஹரியாணாவில் 17,005 பேர், பிஹாரில் 11,876 பேர், கேரளாவில் 5,429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,174 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒடிசாவில் 9,070 பேர், சண்டிகரில் 450 பேர், ஜார்க்கண்டில் 2,584 பேர், திரிபுராவில் 1,568 பேர், அசாமில் 11,388 பேர், உத்தரகாண்டில் 3,124 பேர், சத்தீஸ்கரில் 3,207 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 1,063 பேர், லடாக்கில் 1,005 பேர், நாகாலாந்தில் 590 பேர், மேகாலயாவில் 62 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாதர் நகர் ஹாவேலியில் 271 பேர், புதுச்சேரியில் 802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 331 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 186 பேர், சிக்கிமில் 123 பேர், மணிப்பூரில் 1,366 பேர், கோவாவில் 1,761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் 269 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago