3-வது இடத்தில் இந்தியா: உலகளவில் கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யாவை முந்தியது

By பிடிஐ

உலகளவில் கரோனா வைரஸால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்ததாக இந்தியா மாறியுள்ளது. 3-வது இடத்தில் இருந்த ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தில் இந்தியா பிடித்துள்ளது.

வேர்ல்டோமீட்டர் கணக்கின்படி 6.90 லட்சத்துக்கும் அதிகமான பாதிப்பை இந்தியா கடந்ததையடுத்து, ரஷ்யாவை பின்னுக்கு தள்ளியது இந்தியா.

வேர்ல்டோ மீட்டர் கணக்கின்படி இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 97 ஆயிரத்து 836 ஆக இருக்கிறது, இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 700 ஆக உள்ளனர்.
ஆனால், ரஷ்யாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்துக 81 ஆயிரத்து 251 ஆக இருக்கிறது, 10 ஆயிரத்து 161 பேர் உயிரிழந்துள்ளனர்

உலகளவில் முதலிடத்தில் இருககும் அமெரி்க்காவில் கரோனாவில் ஒட்டுமொத்தமாக 29 லட்சத்து 82 ஆயிரத்து 928 பேர் நேற்றுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 539 பேர் உயிரிழந்துள்ளனர்

பிரேசிலில் இதுவரை கரோனாவால்16 லட்சத்து 4ஆயிரத்து 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 64 ஆயிரத்து 900 பேர் பலியாகியுள்ளனர்.

பிடிஐ செய்தி நிறுவனத்தின் கணக்கின்படி கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கரோனாவில் 19 ஆயிரத்து 683 பேர் பாதி்க்கப்பட்டுள்ளனர், இதன் மூலம் கரோனா பாதிப்பு 6 லட்சத்து 90 ஆயிர்தது 349 ஆக அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளது. ஆனால், இன்று காலை 9 மணி அளவில்தான் மத்திய சுகாதாரத்துறை புள்ளிவிவரங்களை அறிவிக்கும்.

ஆனால், ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கணக்கின்படி உலகளவில் ரஷ்யாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 80 ஆயிரத்து283 ஆகவும், இந்தியாவில் 6 லட்சத்து 73 ஆயிரத்து 165 ஆகவும் இருக்கிறது. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கணக்கின்படி ரஷ்யாவை இன்னும் இந்தியா முறியடிக்கவில்லை.

இந்தியாவில் நேற்று அதிகபட்சமாக எப்போதும் இல்லாத வகையில் 24 ஆயிரத்து 850 பேர் பாதிக்கப்பட்டனர், 613 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கரோனாாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்தத்து 73 ஆயிரத்து 165 ஆக அதிகரித்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 268 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து 3-வது நாளாக நாள்தோறும் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தைக் கடந்ததுள்ளது.
அதேசமயம், கரோனாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்து 4 லட்சத்து 9 ஆயிரத்து 82 ஆக உயர்ந்தது. 2 லட்சத்து 44 ஆயிரத்து 814 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்