கேரளாவில் கரோனா வைரஸ் பாதுகாப்பு விதிகள் அடுத்த ஓராண் டுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொது இடங்களில் எச்சில் துப்புவது தடை செய்யப் பட்டுள்ளது. பொது இடங்கள், பணியிடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ.10 ஆயி ரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுத்துள்ளது.
நாட்டில் முதன்முதலாக கேரளா வில் கடந்த ஜனவரி 30-ம் தேதி கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் ஒன்றாக கேரளா உள்ளது. அம்மாநிலத்தில் தற்போது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கரோனா வைரஸை எதிர்த்துப் போரிடுவதற் காக மாநில தொற்றுநோய் அவசர சட்டத்தில் கேரள அரசு திருத்தம் செய்துள்ளது. இதன் அடிப்படையில் புதிய வழிகாட்டு விதிகளை முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு பிறப்பித்துள்ளது. இந்த விதிகள் 2021 ஜூலை வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதன்படி, பணியிடங்கள் மற் றும் பொது இடங்களில் அனை வரும் முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதும் கண்டிப்புடன் அமல்படுத்தப்படும். திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை மட்டுமே பங்கேற்க முடியும். இதில் பங்கேற்பவர்களும் கட்டா யம் முகக் கவசம் அணிய வேண் டும். 6 அடி சமூக இடைவெளியும் கடைபிடிக்கப்பட வேண்டும். அனைவரும் கைகளை சுத்தம் செய்துகொள்ள கிருமிநாசினி வழங்கப்பட வேண்டும்.
கரோனா நோயாளி அல்லாத வர்களின் இறுதிச் சடங்குகளில் 20 பேர் வரை மட்டுமே பங்கேற்ற வேண்டும். ஊர்வலம், பொதுக்கூட் டம், போராட்டம் போன்ற நிகழ்ச்சி களுக்கு எழுத்துப்பூர்வமாக முன்அனுமதி பெற வேண்டும். இவற்றிலும் கரோனா பாதுகாப்பு விதிகளுடன் 10 பேர் வரை மட் டுமே பங்கேற்க முடியும். கடை கள், வணிக வளாகங்களில் 20 பேர் வரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்புவது தடை செய்யப் படுகிறது. வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கேரளா வருவோருக்கு இ-பாஸ் தேவை யில்லை. என்றாலும் இவர்கள் கேரள அரசின் ஜாக்ரதா இணைய தளத்தில் https://covid19jagratha.kerala.nic.in பயண விவரத்தை பதிவு செய்ய வேண்டும்.
இந்த விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும். விதிகளை மீறுவோர் கேரள தொற்றுநோய் சட்டம் 2020-ன் கீழ் தண்டிக்கப்படுவார்கள்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
30 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago