ஆன்லைன் வகுப்புகளால் யாதொரு பயனும் இல்லை: ஆய்வில் பெற்றோர்கள் கருத்து 

By பிடிஐ

தெலுங்கானாவில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் பயனுள்ளதாக இல்லை என பல பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கரோனா அச்சம் காரணமாக நாடு முழுதும் கல்விநிலையங்களைத் திறக்க முடியவில்லை. இதனால் பல கல்விநிலையங்கல் ஆன்லைன் வகுப்புகளை எடுத்து வருகின்றன. இது ஒருபுறம் மாணவர்களுக்கு சாதகமானது என்று நிர்வாகத்தரப்பில் கூறப்பட்டாலும் பல நடைமுறைச்சிக்கல்கள் ஏற்பட்டு மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் செல்போன்கள் உள்ளிட்ட மின்னணு தொடர்புச் சாதனங்களை குழந்தைகள் அதிகம் பயன்படுத்துவதால் குழந்தைகளின் கண்பார்வை பாதிக்கப்படுவதாக எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில் ஆன் லைன் வகுப்புகள் என்ற பெயரில் 2 மணி நேரம் வகுப்புகள் மட்டும் எப்படி அனுமதிக்கப்படுகின்றன என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

மேலும் ஆசிரியர்களுக்கு இதற்கான முறைப்படி பயிற்சி இல்லாததால் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்கள் பேசுவது சில சமயம் வேற்று மொழி போல் ஒலிப்பதையும் பல பெற்றோர்கள் புகார்களாக கூறிவருகின்றனர். அனைத்தையும் தாண்டி பெற்றோரிடம் பள்ளிக்கட்டணம் வசூலிப்பதற்காகவே இந்த ஆன்லைன் வகுப்புகள் என்ற விமர்சனமும் இருந்து வருகிறது.

இந்நிலையில் தெலங்கானாவில் பள்ளிகளில் 2020-21 கல்வியாண்டின் துவக்கம் மற்றும் ஆன்லைன் வகுப்புகளை அணுகுவது குறித்து, தெலுங்கானா மாநில ஐக்கிய ஆசிரியர் கூட்டமைப்பு (TSUTF - Telangana state union teachers foundation) ஆய்வு ஒன்றை நடத்தியது. மாநிலத்தில் உள்ள 33 மாவட்டத்தில் 1,868 கிராமங்கள் - வார்டுகளில் இருக்கும் 30,458 அரசு பள்ளி மாணவர்கள் , 39,569 தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் 22,502 பெற்றோர்கள் ஆகியோரிடம் 1,729 ஆசிரியர்களால் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், பலதரப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் தனியார் பள்ளி மாணவர்களில் 68.7 சதவீதம் பேர் ஆன்லைன் வகுப்புகளைப் புரிந்து கொள்ளவில்லை எனவும், அதே நேரத்தில் 27.7 சதவீதம் பேர் கற்பிக்கப்படுவதை ஓரளவிற்கு தான் புரிந்து கொள்ள முடிவதாகவும் கூறுகின்றனர்.

5,220 பெற்றோர்களில் 70.9 சதவீதம் பேர் ஆன்லைன் வகுப்புகள் பயனுள்ளதாக இல்லை என குற்றம்சாட்டுகின்றனர். என்னதான் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டாலும், வகுப்பறையில் எடுக்கப்படும் சிறப்பான கல்விக்கு ஈடாகாது. அதன்படி, 48.9 சதவீத குடும்பங்களில் ஒரு ஸ்மார்ட் போன் தான் உள்ளது. 38.6 சதவீதம் பேருக்கு ஒன்றும் இல்லை. மொபைல் உள்ளவர்களிடம் 58.7 சதவீத பெற்றோருக்கு இன்டர்நெட் உள்ளிட்ட வசதி இல்லை. 30.3 சதவீதம் பேரிடம் உள்ளது. ஆனால் மெய்நிகர் வகுப்புகளுக்கு இது போதாது.

தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இருந்தால், கொரோனா பாதிக்கப்படாத பகுதிகளில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம் என்று கணக்கெடுக்கப்பட்ட பெற்றோர்களில் சிலர் கருதுகின்றனர். அதன் பரிந்துரைகளை வழங்கி, ஆசிரியர் சங்கம் 2020-21 கல்வியாண்டை ஆஃப்லைனில் தொடங்குமாறு மாநில அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்