கான்பூர், ஆக்ரா மெட்ரொ ரயில் திட்டங்களுக்கான ஒப்பந்தத்தை பாம்பார்டியர் ட்ரான்ஸ்போர்ட் இந்தியா என்ற தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்று உத்தரப்பிரதேச மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
3 பெட்டிகள் கொண்ட 67 மெட்ரோ ரயில்களுக்கான இந்த ஒப்பந்தத்தில் சப்ளை, டெஸ்ட்டிங் மற்றும் ரயில் கட்டுப்பாட்டு, சிக்னல் கட்டுப்பாட்டுகள் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் பாம்பார்டியர் ட்ரான்ஸ்போர்ட் இந்தியா தனியார் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்காக இந்த ஆண்டு பிப்ரவரியில் 4 பன்னாட்டு நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகளை அனுப்பியிருந்தன.
இந்த ஒப்பந்தப் புள்ளிகளை ஆய்வு செய்த பிறகு உ.பி. மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் சீன நிறுவனமான சிஆர்ஆர்சி நாஞ்ஜிங் புஷேன் நிறுவனத்தை தகுதியிழப்பு செய்தது.
ஜூலை 3ம் தேதியன்று தொழில்நுட்ப ரீதியாக தகுதியான நிறுவனங்களின் ஒப்பந்தப் புள்ளிகளை உ.பி. மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ஜூலை 3ம் தேதி திறந்தது. இதில் குறைந்த கட்டணம் கோரியிருந்த பாம்பார்டியர் ட்ரான்ஸ்போர்ட் இந்தியா தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
நவீன ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ரயில்களை பாம்பார்டியர் நிறுவனம் தனது குஜ்ராத் ஆலையில் தயாரித்து வழங்கும்.
முதல் ரயில்களை 65 வாரத்துக்குள் வழங்குமாறு மிகவும் நெருக்கமான இறுதிக்கெடுவை உ.பி. மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அளித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
21 mins ago
இந்தியா
45 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago