பேஸ்புக்கில் சுமார் 8.7 கோடிபயனாளிகளின் தகவல்கள் திருடப்பட்டதாகவும், அத்தகவல்கள் குளோபல் சயின்ஸ் ரிசர்ச் நிறுவனத்தின் வாயிலாக கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின. அதை பேஸ்புக் நிறுவனமும் ஒப்புக்கொண்ட நிலையில், இந்திய பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களும் திருடப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
அந்த தகவல்களை வைத்து,தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வியூகங்கள் வகுப்பதற்குகேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் உதவியதாக கூறப்பட்டது.
இதுகுறித்து பேஸ்புக் நிறுவனத் துணைத் தலைவர் கோன்ஸ்டான்டினோஸ் பாப்பாமில்டியாடிஸ் கூறும்போது, “பேஸ்புக்பயனாளிகளின் தகவல்கள் 5 ஆயிரம் டெவலப்பர்களுக்கு தவறுதலாக பகிரப்பட்டுள்ளதை அண்மையில் கண்டறிந்தோம். அதை கண்டுபிடித்த மறுநாளே சிக்கலை சரிசெய்தோம். நாங்கள்இந்த பிரச்சினை குறித்து தொடர்ந்து விசாரணை நடத்துவோம். மேலும் எந்தவொரு விஷயத்துக்கும் வெளிப்படைத்தன்மைக்கும் முன்னுரிமை அளிப்போம். இதைத் தொடர்ந்து புதிய அமைப்புக்கான விதிகள், டெவலப்பர் கொள்கைகளை அறிமுகம் செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago