ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் நேற்று வரை 1,32,777 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதியில் வெட்டுக்கிளியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில், ஏப்ரல் 11-ம் தேதி முதல் ஜூலை 2-ம் தேதிவ வரை வட்டார வெட்டுக்கிளி கட்டுப்படுத்தும் அலுவலகங்கள் மூலம், வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2 – 3 ஜூலை, 2020-க்கு இடைப்பட்ட இரவில் மட்டும், ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்சால்மர், பார்மர், ஜோத்பூர், நகோர், சிகார், ஜெய்ப்பூர் மற்றும் ஆல்வார் ஆகிய 7 மாவட்டங்களுக்குட்பட்ட 19 இடங்களிலும், மத்தியப்பிரதேசத்தின் திகாம்கர் மாவட்டத்திற்குட்பட்ட 2 இடங்களிலும், வட்டார வெட்டுக்கிளி அலுவலகங்களால், இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதே காலகட்டத்தில், மாநில அரசுகளும் வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டன. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்திஸ்கர், ஹரியானா மற்றும் பீகார் மாநிலங்களில், 2 ஜுலை2020 வரை, 1,13,003 ஹெக்டேர் பரப்பளவில், மாநில அரசுகளால் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. 2 – 3ஜுலை, 2020க்கு இடைப்பட்ட இரவில் மட்டும், ராஜஸ்தான் மாநிலம் கரோலி, சவாய் மாதோபூர், பாலி மற்றும் தோல்பூர் மாவட்டங்களுக்குட்பட்ட 4 இடங்களில், சிறிய அளவிலான கூட்டங்களாகவும், ஆங்காங்கேயும் பரவியிருந்த வெட்டுக்கிளிகளைக்
கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அம்மாநில வேளாண்மைத்துறை மேற்கொண்டது.ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் தற்போது 60 வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டுக் குழுக்கள், மருந்து தெளிப்பான் இயந்திரங்களுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன; மத்திய அரசுப் பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது தவிர, ராஜஸ்தான் மாநிலம் பார்மர், ஜெய்சால்மர், பிகானிர், நகோர் மற்றும் பலோடி பகுதிகளில் உள்ள உயரமான மரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லித் தெளிப்பான் கருவிகளை எடுத்துச் செல்ல முடியாத இடங்களில், 12 டிரோன்களுடன் 5 குழுக்கள் ஈடுபட்டுள்ளன.
குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்திஸ்கர், பீகார் மற்றும் ஹரியாணாவில் குறிப்பிடத்தக்க அளவிற்கு பயிர் பாதிப்பு இல்லை. எனினும், ராஜஸ்தான் மாநிலத்தின் சில மாவட்டங்களில் குறைந்த அளவிலான பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago