ஆந்திராவில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 845 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அனைத்து துறை ஊழியர்களுக்கும் கடந்த சில நாட்களாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கான முடிவுகள் நேற்று வந்தன.
இதில் சட்டப்பேரவை ஊழியர்கள் 2 பேருக்கும், தலைமைச் செயலக ஊழியர்கள் 10 பேருக்கும், கால்நடைத்துறையில் பணியாற்றும் ஒருவருக்கும், நீர்வளத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் 3 பேருக்கும் என மொத்தம் 16 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று பணிக்கு வந்த இவர்கள் அனைவரும் உடனடியாக அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றுக்கொள்வதாக தெரிவித்ததால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இவர்களை தொடர்பு கொண்டவர்கள், குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கும் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago