ஆரம்ப பள்ளி கட்ட மாணவர்களுக்கான எட்டு வார கால மாற்றுக் கல்வி அட்டவணையை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெளியிட்டார்.
பொதுமுடக்கக் காலத்தின் போது மாணவர்கள் தங்கள் இல்லங்களில், நேரத்தைப் பயனுள்ள முறையில் செலவிடுவதற்காக, தங்களுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் துணையுடன் கல்விசார் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்காக ஆரம்பகட்ட மற்றும் உயர் ஆரம்பகட்ட மாணவர்களுக்கான மாற்றுக்கல்வி அட்டவணை, மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறையின் வழிகாட்டுதலுடன், தேசிய கல்வி ஆராய்ச்சிக் கவுன்சில் (NCERT) அமைப்பால் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட மாணவர்களுக்கான எட்டு வார கால மாற்றுக் கல்வி அட்டவணையை இன்று புதுதில்லியில் மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் வெளியிட்டார். முன்னதாக ஆரம்ப வகுப்புகளுக்கான அட்டவணை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரு பொக்ரியால் அவர்களால் வெளியிடப்பட்டது,.
இல்லங்களில் இருந்தவாறே கற்பவரும், பெற்றோரும், ஆசிரியர்களும் பயன்படுத்தக்கூடிய வகையில், விளையாட்டுப் போக்காக, ஆர்வத்தை ஏற்படுத்துகின்ற வகையிலான முறையில், கல்வி கற்பதற்கான பல்வேறு தொழில்நுட்பக் கருவிகளும் சமூக ஊடகக் கருவிகளும் எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்த ஆசிரியர்களுக்கான விதிமுறைகள், இந்த அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன என்று நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கூறினார்..\
அலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, குறுஞ்செய்தி மற்றும் பல சமூக ஊடகங்கள் மூலமாக, கல்வி பெறுவது குறித்தும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. நம்மில் பலரிடம் அலைபேசியில் இணைய வசதி இல்லை என்பதும், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் போன்ற பல்வேறு சமூக ஊடகக்கருவிகளை பயன்படுத்த முடியாமல் இருப்பதும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது . பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் குறுஞ்செய்தி மூலமாக வழிகாட்டுவது, அழைப்பு விடுத்து அவர்களுடன் பேசி அவர்களை வழிநடத்துவது, ஆகியவற்றுக்கான வழிமுறையும் இந்த அட்டவணையில் இடம் பெற்றுள்ளன. துவக்கப்பள்ளி மாணவர்களுக்கான இந்த அட்டவணைப்படியிலான கல்வித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பெற்றோர்கள் உதவுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகள் உட்பட அனைத்து குழந்தைகளும் பயன்பெறும் வகையில் இந்த அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. ஒலி வடிவப் புத்தகங்கள், வானொலி நிகழ்ச்சிகள், வீடியோ நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான இணைப்புகளும் இந்த அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
கலை, கல்வி, உடற்பயிற்சி, யோகா, கைத்தொழில் திறன் ஆகிய பல்வேறு விதமான அனுபவப்பூர்வமான கல்வித்திட்டங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. வகுப்பு வாரியான, பாட வாரியான செயல்பாடுகள் வரிசைக் கிரமமாக அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தி, ஆங்கிலம், உருது, சமஸ்கிருதம் ஆகிய நான்கு மொழிகள் தொடர்பான செயல்பாடுகளும் இதில் உள்ளன. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான உத்திகளும் இதில் இடம்பெற்றுள்ளன. e-pathshala, NROER, DIKSHA ஆகிய மத்திய அரசின் இணையதளங்களில் உள்ள மின் பாடத்திட்டங்களின் இணைப்பும் அத்தியாயம் வாரியாக கொடுக்கப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago