மருத்துவர்கள் தினத்தையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மருத்துவர்களுக்கு நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளார்
மருத்துவர்கள் நாளான இன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவு ஒன்றில், கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்று பணியாற்றிய, துணிச்சலான இந்திய மருத்துவர்களுக்கு நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளார்.
சவாலான இந்தக் காலகட்டத்தில், தேசத்தைப் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதில் மருத்துவர்கள் காட்டிய அதிகபட்ச உறுதி உண்மையிலேயே உன்னதமானது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
மருத்துவர்கள் நாளன்று, தேசம், அவர்களது ஈடுபாட்டிற்கும், தியாகத்திற்கும் மரியாதை செலுத்துவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மனித குலத்திற்கு பணியாற்றுவதற்காக, 24 மணி நேரமும், சுயநலமின்றி, உழைத்துக் கொண்டிருக்கும் நமது மருத்துவர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒன்றுபட்டு நிற்பதாக அமித் ஷா கூறியுள்ளார்.
நெருக்கடியான தருணங்களில், தமது முழு ஒத்துழைப்பையும், தார்மீக ஆதரவையும், அளித்து வரும் மருத்துவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
47 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago