கரோனாவில் குணமடைந்தோர் 3.50 லட்சத்தை நெருங்குகிறார்கள்: உயிரிழப்பு 17 ஆயிரத்தைக் கடந்தது: ஒரேநாளில் 507 பேர் பலி

By பிடிஐ

இந்தியாவில் கரோனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 507 பேர் பலியாகியுள்ளனர், 18 ஆயிரத்து 653 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 5 லட்சத்து 85 ஆயிரத்து 493 ஆக அதிகரித்து ஏறக்குறைய 6 லட்சத்தை நெருங்கியுள்ளது. கரோனாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்தத்து 47 ஆயிரத்து 398 ஆக உயர்்ந்துள்ளது, 2 லட்சத்து 20 ஆயிரத்து 114 பேர் தொடர்ந்து சிகிச்சை உள்ளனர். கரோனாவிலிருந்து மீண்டோர் சதவீதம் 59.43 ஆக அதிகரித்துள்ளது

கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 507 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் பலியானார் எண்ணிக்கை 17 ஆயிரத்து 400 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக நேற்று 245 பேர் உயிரிழந்தனர்.

அதைத் தொடர்ந்து டெல்லியில் 62 பேர், தமிழகத்தில் 60 பேர், உத்தரப்பிரதேசத்தில் 25 பேர், கர்நாடகாவில் 20 பேர், குஜராத்தில் 19 பேர், மேற்கு வங்கத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் தலா 8 பேர், தெலங்கானா, ஆந்திராவில் தலா 7 பேர், ஜம்மு காஷ்மீர் , பஞ்சாபில் தலா 6 பேர், பிஹாரில் 5 பேர், ஹரியானாவில் 4 பேர், கேரளா, ஒடிசா, புதுச்சேரி, உத்தரகாண்டில் தலா 2 பேர், அசாம், இமாச்சலப்பிரதேசத்தில் தலா ஒருவர் உயிரிழந்தனர்

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 7,855 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 2,742 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 1,846 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 1,201 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 668 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 572 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 697 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 413 ஆகவும் அதிகரித்துள்ளது.
தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 260 ஆகவும், ஹரியாணாவில் 236 ஆகவும், ஆந்திராவில் 187 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 246 பேரும், பஞ்சாப்பில் 144 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 101 பேரும், பிஹாரில் 67 பேரும், ஒடிசாவில் 25 பேரும், கேரளாவில் 22 பேரும், உத்தரகாண்டில் 41 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 10 பேரும், ஜார்க்கண்டில் 15 பேரும், அசாமில் 12 பேரும், மேகாலயாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 12 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 761 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 90,911 ஆக உயர்ந்துள்ளது.

2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90ஆயிரத்து 167ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 500,74 ஆகவும் அதிகரித்துள்ளது. டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87,360 பேராக அதிகரித்துள்ளது. 58,348 பேர் குணமடைந்துள்ளனர்.

4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 32,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 23,662 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 18,014 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 13,593 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 23,492 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 18,559 பேரும், ஆந்திராவில் 14,595 பேரும், பஞ்சாப்பில் 5,568 பேரும், தெலங்கானாவில் 16,339 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 7,497 பேர், கர்நாடகாவில் 15,242 பேர், ஹரியாணாவில் 14,598 பேர், பிஹாரில் 10,043 பேர், கேரளாவில் 4,442 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,306 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 7,065 பேர், சண்டிகரில் 440 பேர், ஜார்க்கண்டில் 2,490 பேர், திரிபுராவில் 1,346 பேர், அசாமில் 8,227 பேர், உத்தரகாண்டில் 2,831 பேர், சத்தீஸ்கரில் 2,860 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 953 பேர், லடாக்கில் 973 பேர், நாகாலாந்தில் 459 பேர், மேகாலயாவில் 52 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாதர் நகர் ஹாவேலியில் 213 பேர், புதுச்சேரியில் 714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 272 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 160 பேர், சிக்கிமில் 89 பேர், மணிப்பூரில் 1,234 பேர், கோவாவில் 1,315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் 191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 97 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்