லடாக் எல்லையில் கடந்த மே மாதம் சீனா - இந்தியா இடையே மோதல் ஏற்பட்டு பதற்றம் உருவானது. அமைதி ஏற்படுத்த ராணுவ அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில் லடாக்கில்ஜூன் 15-ம்தேதி இந்திய, சீன வீரர்கள் இடையே கடும் மோதல்ஏற்பட்டது. இதில் இருதரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில், பதற்றத்தைத் தணிக்கவும் படைவீரர்களை வாபஸ் பெறவும் வழி காண இருதரப்பு மூத்த ராணுவ கமாண்டர்கள் நிலையில் சுஷுல் பகுதியில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இது ஒருபுறம் இருந்தாலும், எத்தகைய சூழலையும்எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராகி வருகிறது.
கல்வான் பள்ளத்தாக்கின் ஆற்றுப்படுகையில் கூடாரங்கள் அமைத்து பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள், தளவாடங்களுடன் சீன ராணுவம் நிலை கொண்டுள்ளதால் இந்தியாவும் அதற்கு நிகராக தயாராக உள்ளது.
கிழக்கு லடாக் பகுதியின் 1,597 கி.மீ. தொலைவு எல்லைக் கோடு பகுதி நெடுகிலும் சக்திவாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கிகள், பீரங்கி தகர்ப்பு ஆயுதங்கள், போர் வாகனங்கள் என ஏராளமான தளவாடங்கள் குவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஸ்பாங்குர் பகுதி வழியாக சீனா தாக்குதல் நடத்தும் திட்டம் வைத்திருந்தால் அதை முறியடிக்க சுஷுல் பகுதியில் 2 பீரங்கி படைகளை இந்தியா நிறுத்தியுள்ளது. இந்தியா நிறுத்தியுள்ள டி-90 பீஷ்மா பீரங்கிகள் சக்தி வாய்ந்தவை. இதில் இருந்து பாயும் ஏவுகணை குண்டுகள் வெகுதொலைவுக்கு சென்று இலக்கை தாக்க வல்லவை. அதேபோல, ஹோவிட்சர் ரக பீரங்கிகளும் ஏராளமாக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. தோளில் சுமந்தபடி எதிரியின் பீரங்கிகளை தகர்க்கும் ஆயுதங்களும் தயார் நிலையில் குவிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், இந்த பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெற உண்மையான எல்லைக்கோடு தொடர்பாக பேசித் தீர்வு காண சீனா முன்வந்துள்ளது. ஆனால் உண்மையான எல்லைக் கோடு நிர்ணயம் பற்றி மறுவரையறை செய்திடும் நோக்கத்தில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் ஒரு அங்குலம் நிலப்பகுதியையும் விட்டுத் தருவதில்லை என இந்திய ராணுவம் உறுதியுடன் உள்ளது. நிலைமை மோசமாகி நீண்ட காலத்துக்கு நீடித்தாலும் அதை முழு பலத்துடன் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக ராணுவ தளபதிகள் கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago