2-ம் கட்ட ஊரடங்கு தளர்வு: சிறிய அலட்சியம் கூட ஆபத்தை ஏற்படுத்தி விடும்: பிரதமர் மோடி எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவின் நிலைமை மிகவும் மேம்பட்ட நிலையிலேயே உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்த லாக்டவுன் தளர்த்தும் முதல்கட்டம் இன்றுடன் முடிந்து நாளை முதல் (ஜூலை-1) 2-வது கட்டம் தொடங்குகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும், பல்வேறு கட்டுப்பாடுகளைத் தளர்த்தியும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது.

முதன்முறையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது மார்ச் 19-ம் தேதி மக்களுக்கு உரையாற்றிய போது மார்ச் 22-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தார்

கரோனா லாக்டவுன் தொடங்கிய பிறகு கடந்த மே 12-ம் தேதி மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்களை அறிவித்தார். அதன் பிறகு நான்குமுறை நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்ற ஊரடங்கு பற்றிய தகவல்களை தெரிவித்தார்.

அதுமட்டுல்லாமல், லாக்டவுன் நடவடிக்கை தளர்த்தப்பட்டு, பொருளாதார சுழற்ச்சிக்கு முழு அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து, சமூகவிலகலைக் கடைபிடிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு மக்களுக்கு உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுமட்டுமின்றி கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் கடந்த 15-ம் தேதி இந்தியா, சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்த பின் முதல் முறையாக பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டு இருந்ததால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

அதன்படி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றனார். பிரதமர் மோடி பேசியதாவது:

பல நாடுகளை ஒப்பிட்டால் இந்தியாவில் கரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு குறைவாகவே உள்ளது. ஊரடங்கு காரணமாக கரோனா பரவலும், உயிரிழப்பும் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தக் கொண்டுவரப்பட்ட லாக்டவுன் தளர்த்தப்படும் 2-வது கட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. சிறிய அலட்சியம் கூட ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

ஊரடங்கு தளர்வு முதல் நிலையில் இதுபோன்ற அலட்சியத்தால் கரோனா பரவல் அதிகரித்ததை மக்கள் மனதில் கொள்ள வேண்டும். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதிகாரிளும் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும்.

ஒருவர் விதிமுறையை மீறி செயல்பட்டால் கூட ஏராளமான மக்களின் உயிருடன் விளையாடுவது போன்றதாகும். எனவே விதிமுறையை மீறி செயல்படுபவர்களை நாம் கண்காணிக்க வேண்டும். அதிகாரிகள் மட்டுமின்றி மக்களும் கூட இந்த விஷயத்தில் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். முககவசம் அணிதல், சமூகவிலகலை கடைபிடித்தல், கைகளை சோப்பு மூலம் கைகழுவது போன்றவை மிகவும் அவசியமாகும்.

இந்த ஊரடங்கு காலத்தில் அனைவரும் பசியின்றி வாழ்வதை நாம் உறுதி செய்துள்ளோம். மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் மூலம் அனைவருக்கும் உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்துள்ளோம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்